SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜாதக கட்டம் கைரேகைகள்?

2018-11-07@ 15:31:39

பொதுவாக சாஸ்திரங்கள் என எடுத்துக் கொண்டால் எத்தனையோ வகையாக இருக்கிறது. ஜோதிடக்கலை என பார்க்கும் போது முதலில் நிற்பது ஜாதகம் எனச் சொல்லப்படும் கிரக அமர்வு கட்டங்கள். இந்த ஜாதக கட்டங்கள் பல வகைகளாக ஒவ்வொரு பாவத்திற்கும் கணக்கிடப்படுகின்றன. வழக்கத்தில் பலன் பார்ப்பதற்கு தற்போதைய நடைமுறையில் ராசிக் கட்டம், பாவ கட்டம், நவாம்ச கட்டம் என இந்த மூன்று கட்டங்களையும் பார்த்து பலன் அறிந்து கொள்கிறோம். இந்த ஜாதக கட்டம் நமக்கு எப்படி அமைகிறது என்றால், அது எண் கணித கணக்குப்படி நமக்கு அமைகிறது. பிறந்த தேதி, மாதம், வருடம், பிறந்த நேரம் போன்றவற்றை வைத்து அந்த நேரத்தில் என்ன லக்னம் நடைபெறுகின்றது என்பதை கணித்து ஜாதகக் கட்டத்தை எழுதுகின்றோம்.

ஜாதகக் கட்டத்தில் இருக்கும் கிரக அமைப்புக்களுக்கும் நம் கையில் உள்ள கிரக மேடுகளுக்கும் ஒற்றுமை இருக்கும். ஜாதகக் கட்டத்தில் கிரகம் பலமாக இருந்தால் எந்த கிரகம் பலமாக இருக்கிறதோ அந்த கிரகத்தின் மேடு நன்றாக அமைந்திருக்கும். ஜாதகத்தில் தன ஸ்தானம் நல்ல அமைப்பில் இருந்தால் உள்ளங்கையில் தன ஸ்தான ரேகை மிக மெல்லியதாக நீண்டு நடுவிரலை நோக்கி செல்லும். புதன் ஜாதகத்தில் பலமாக அமைந்து இருந்தாலோ, அல்லது புதன் ஆதிக்கத்தில் ஒருவர் பிறந்திருந்தாலோ, கைவிரல்கள் மெல்லியதாக நீண்டு இருக்கும். குறிப்பாக சுண்டுவிரல் நீண்டு இருக்கும். சில விசேஷமான ரேகைகள் புதன் மேட்டில் அமைந்து இருக்கும். சனிபகவான் லக்னத்தை, ராசியைப் பார்த்தால் ஒருவரின் செயல் பாடுகளில் வேகம் இருக்காது.

எதையும் யோசித்துச் செய்வார்கள். அடிக்கடி மனதை மாற்றிக்கொள்ளும் மனோபாவம் இருக்கும். கருப்பு, சிவப்பு, கோதுமை நிறம், மாநிறம் போன்றவை எல்லாம் அவரவர் பெற்றோர்கள், பரம்பரை குடும்ப வழியில் வருவதாகும். நல்ல இளம் சிவப்பு நிறத்தில் உடல் வசீகரம் இருந்தாலும் சனிபகவானின் பார்வையால் இளமையிலேயே முதுமையான தோற்றம் இருக்கும். முகத்தில் ஒரு முதிர்ச்சி தெரியும். இளம் வயதிலேயே நெற்றியில் கோடுகள் பளிச்சென்று தெரியும். சந்திரனை மேகம் மூடுவதுபோல் ஒரு கருமை முகத்தில் கன்னக் கதுப்புக்களில் படர்ந்திருக்கும். ஜாதக அமைப்பில் தசாபுக்திகள் மாறும்போது கைரேகை, மேடுகளில் அது துல்லியமாக வெளிப்படும். யோக தசைகள் ஆரம்பம் ஆகும்போது குறிப்பிட்ட அந்த கிரகத்தின் மேடு நன்றாக இருக்கும். படுக்கை கோடுகள் காணப்படும். சிலருக்கு தாமரை, நட்சத்திரம் போன்ற குழிகள் தோன்றும். உள்ளங்கை வெளிர் சிவப்பு நிறத்தில் வெண்மை மற்றும் ஆரஞ்சு நிறப்புள்ளிகளுடன் காணப்படும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

 • libya_sandai11

  தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

 • thuppaki-12jk

  13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

 • hurricane_12

  அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்