SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவது ஏன்?

2018-11-05@ 15:26:20

நரகாசுரன் என்ற அரக்கன் ஒருவன் இருந்தான். அவனுக்கு இந்த மூவுலகத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தன் விருப்பத்திற்கு அனுபவிக்க வேண்டும்  என்று ஆசை இருந்தது. இந்த ஆசைகளை நிறைவேற்ற பிரம்மனை நோக்கி கடும் தவம் இருந்தான் நரகாசுரன். இதனைப் பார்த்த பிரம்மன், தனக்காக தவம்  இருந்த நரகாசுரனுக்கு அவன் கேட்கும் வரங்களை அள்ளிக் கொடுத்தார். ஒரு கெட்டவனுக்கு பதவி கிடைத்தால் எப்படியெல்லாம் பயன்படுத்துவானோ  அப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டான் நரகாசுரன். தனக்கு வரம் கொடுத்த பிரம்மனை எதிர்த்தே போர் தொடுத்தான் நரகாசுரன். காக்கும் கடவுளான  கிருஷ்ண பகவானிடம் தன் குறைகளைக் கூறி முறையிட்டார்.

இதனால் கிருஷ்ண பகவான் நரகாசுரனை அணுகி, தவம் செய்து பெற்ற வரத்தை தவறான வழியில் செயல்படுத்துவது நியாயம் அல்ல என்று முறையாக  சொல்லிப் பார்த்தார். ஆனால் நரகாசுரன் கேட்கவில்லை. இதனால் கோபம் அடைந்த கிருஷ்ண பகவான், தம் சக்கராயுதத்தால் அவனின் உடலை இரண்டாகப்  பிளந்தார். இறக்கும் நிலையில் நரகாசுரன், கொடியவனாக நான் இறக்கும் இந்நாளை மக்கள் அனைவரும் அல்லல் நீங்கிய நன்னாளாக கொண்டாடி மகிழ  வேண்டும் என்று வேண்டினான். கிருஷ்ணரும் அவ்வாறே அருளினார். இதனால்தான் நரகாசுரன் இறந்த நாளை தீபாவளியாக கொண்டாடி வருகின்றனர்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-03-2019

    24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-03-2019

    23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • SuperWormMoon

    2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

  • sharkpalne

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

  • iraqnewyear

    ஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்