SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இது பள்ளிவாசலுக்கான காணிக்கை!

2018-11-05@ 14:40:44

வழிபாட்டுத் தலங்களுக்குப் போகும்போது பூ, பழம், தேங்காய் எல்லாம் கொண்டு போவார்கள் அல்லவா? குறைந்தது தீபாராதனை காட்ட கற்பூரமாவது எடுத்துச் செல்வார்கள். விரும்பினால் தட்டில், உண்டியலில் காணிக்கை செலுத்துவார்கள். பள்ளிவாசலில் இதுபோல் ஏதேனும் ‘காணிக்கை செலுத்துதல்’ உண்டா? உண்டு. என்ன அந்தக் காணிக்கை?  முதலில், பள்ளியினுள் நுழையும்போது ஓத வேண்டிய ஓர் அழகான, சிறிய பிரார்த்தனையை இறைத்தூதர் அவர்கள் கற்றுத்தந்துள்ளார்கள்.“இறைவா..! உன் அருளின் வாசலை எனக்குத் திறப்பாயாக” என்று பிரார்த்தனை செய்தபடி உள்ளே நுழைய வேண்டும். உள்ளே நுழைந்து விட்டீர்கள். உடனே உட்கார்ந்துவிடக் கூடாது. ஏக இறைவனின் வழிபாட்டுத் தலமான பள்ளி வாசலுக்கும் ‘காணிக்கை’ செலுத்த வேண்டும்.

அதைச் செலுத்திவிட்டு அமர்வதுதான் சிறப்பு. இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்: “நீங்கள் பள்ளியில் நுழைந்தால் அமரும் முன்பு இரண்டு ரக்அத்(நஃபில் உபரித் தொழுகை) தொழுது கொள்ளுங்கள்.”நபிமொழி அறிஞர்கள் இந்தத் தொழுகையை அரபு மொழியில் ‘தஹிய்யத்துல் மஸ்ஜித்’ (பள்ளிவாசலின் காணிக்கை) என்று குறிப்பிடுகிறார்கள். பள்ளிவாசலில் எப்போது நுழைந்தாலும் இந்தக் காணிக்கையைச் செலுத்த வேண்டும். அதாவது இரண்டு ரக்அத் உபரித் தொழுகை தொழ வேண்டும். இதுதான் பள்ளிக்குச் செலுத்தும் ‘காணிக்கை’. ஒருவர் பள்ளிவாசலில் நுழைந்ததும் மறதியாக இந்தக் காணிக்கையைச் செலுத்தாமல் அமர்ந்துவிடுகிறார். அது தவறா? இல்லை. தவறு இல்லை.

ஆனால், காணிக்கைத் தொழுகையைத் தொழுதுவிட்டு அமர்வது மிகுந்த நன்மை அளிக்கக்கூடியது. சிலர் தொழுது முடித்தவுடனே விழுந்தடித்துக்கொண்டு  எழுந்து சென்றுவிடுவார்கள். இப்படிச் செய்வதை மார்க்கம் வெறுக்கிறது. தொழுகை முடிந்ததும் அதே இடத்தில் சிறிது நேரம் அமர்ந்து இறைதியானத்தில் ஈடுபடுவது ஏராளமான நன்மைகளை ஈட்டித்தரும் என்று சொல்லப்பட்டுள்ளது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:“நீங்கள் தொழுதபின் அதே இடத்தில் அங்கத் தூய்மையுடன் உட்கார்ந்து இருக்கும் காலமெல்லாம் வானவர்கள் உங்களுக்காக, “இறைவா, இவருடைய பாவங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக!’ என்று பிரார்த்திக்கிறார்கள்.”(ஆதாரம்அபூதாவூத்) தூய்மையான நிலையில் பள்ளிக்குள் நுழைவோம். நுழைந்ததும் பள்ளியின் காணிக்கைத் தொழுகையை நிறைவேற்றுவோம். இறைதியானத்தில் ஈடுபடுவோம்.

இந்த வார சிந்தனை

“தொழுகையை எதிர்பார்த்து ஒருவன் அமர்ந்திருக்கும் காலமெல்லாம் அவன் தொழுகையில் இருப்பதாகவே கருதப்படுவான்.” நபிமொழி.

சிராஜுல்ஹஸன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-11-2018

    19-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்