SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்

2018-11-02@ 09:59:09

கல்லறைத் திருவிழா 2.11.2018

மரணம் என்பது வாழ்வின் முடிவுரை என்றே நாம் அழுது கதறி புலம்புகின்றோம். இறப்பு என்பது அழிவல்ல; நிலையான வாழ்வில் நுைழவதற்கான வாசல். கிறிஸ்துவுக்குள் இறப்பவர்களுக்கு இறப்பு இழப்பு அல்ல, அது ஆதாயமே! நமது வாழ்க்கை வரலாற்றில் இவ்வுலக வாழ்வு என்பது ஒரு சிறிய, அதேசமயத்தில் சிறப்பான அனுபவம் மட்டுமே என்ற உண்மையைப் புரிந்துகொள்ளுவோம். இறந்தோரின் ஆவிகள் இறைவனோடு மாட்சியில் வாழ்கிறார்கள் என்று நம்புவோம். இறைவனைப் பொறுத்தமட்டில், பிறப்பதற்கு முன்னரே அவரது கருத்தில், எண்ணத்தில் இருக்கிறான். இவ்வுலகில் வாழும்போது அவரது பாதுகாப்பில், அன்பில் நனைகிறான். இறப்பிற்குப் பின்னும் அவரது மாட்சியில் பங்கு பெறும் வாழ்வில் நிலைக்கிறான்.

ஒரு மனிதனின் இந்த வரலாற்றில் பிறப்பு, இறப்பு என்பது இடையில் வந்துபோகும் நிகழ்வுகளே! இத்தகைய இறைவனின் பார்வையில் நாமும் நமது வாழ்வைப் பார்ப்பது மிகவும் நன்மை பயக்கும் ஒன்றாகும். நிலையற்றவற்றை நிலையானதாகக் காண்பதுதான் எல்லா மனிதத் துன்பங்களுக்கும் பிறப்பிடம். இறந்தோருக்காக வாழ்வோர் செய்யும் ஜெபம். தர்மச்செயல்கள் பயன்தரும். இறந்தோருக்காக ஜெபிப்பது இறந்தோருக்கு மட்டுமல்ல ஜெபிப்போருக்கும் பலன் தரும். இறந்தோரின் வாழ்வு முடிந்துவிடவில்லை என்ற நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே இறந்தோருக்காக ஜெபிப்பர். இறப்புடன் வாழ்வு முடியவில்லை. உயிர்தெழுவோம் என்பதே நம் விசுவாசம். இதை இயேசுவிடமிருந்தே நாம் பெற்றுள்ளோம். இயேசுவே உயிர்ப்பும் உயிரும். இயேசுவே மரணத்தை வென்றார்.

ஆகவே நாமும் சாவை வெல்வோம்!‘‘ஆண்டவரே என் ஆயர், எனக்கேதும் குறையில்லை. பசும்புல் வெளிமீது என்னை அவர் இளைப்பாறச்செய்வார். அமைதியான நீர்நிலைகளுக்கு என்னை அழைத்துச்செல்வார். அவர் எனக்குப்புத்துயிர் அளிப்பார். தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்துவார். மேலும் சாவின் இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும் நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன். உம்கோலும் நெடுங்கழியும் என்னைத்தேற்றும். என்னுடைய எதிரிகளின் கண்முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர். என் தலையில் நறுமணத்தைலம் பூசுகின்றீர். எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. உண்மையாகவே என் வாழ்நாள் எல்லாம் உம் அருள்நலமும் பேரன்பும் என்னைப் புடை சூழ்ந்துவரும்.

‘‘நானும் ஆண்டவர் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.’’  (திருப்பாடல்கள் 23: 16) ‘‘இறந்துபோய் மண்புழுதியில் உறங்குகிற அனைவருள் பலரும் விழித்தெழுவர். அவருள் சிலர் முடிவில்லா வாழ்வு பெறுவர். வேறு சிலரோ வெட்கத்திற்கும், முடிவில்லா இழிவுக்கும் உள்ளாவர். ஞானிகள் வானத்தின் போராளியைப் போலவும், பலரை நல்வழிக்குக் கொணர்ந்தவர் விண்மீன்களைப்போலவும் என்றென்றும் முடிவில்லாக்காலத்திற்கும் ஒளி வீசித்திகழ்வர்.’’  (தானியேல் 23: 23) இறப்பு என்பது இயல்பானது. இயற்கையான முறையில் நிகழ்வதே வரம்; இறை சித்தம். திருச்சபை இன்று இறந்த நம்பிக்கையாளர் அனைவரின் நாளாகக் கொண்டாடுகின்றது.

உத்தரிக்கிற நிலைக்குச்செல்கின்ற ஆன்மாக்கள் அங்கு அய்மை நிலை அடைய வேண்டும். அய்மை நிலை என்பது இறை உறவில் இணைந்து விண்ணக நிலை வாழ்வை அடைவது உறுதி என்றாலும், அந்நிலையை அடைவதற்குமுன் தங்களின் பாவங்களுக்காகப் பரிகாரம் செய்ய வேண்டும். இந்நிலையை அவர்கள் அடைய இறந்தவர் யாரும் தங்களுக்காக இறைவனிடம் வேண்டல் செய்ய இயலாது. உயிரோடு இருப்பவர்கள் அவர்களின் தூய்மை நிலைக்காக இறை வேண்டல் செய்வதிலும், திருப்பலி ஒப்புக்கொடுப்பதிலும் ஈடுபட வேண்டும் என்று திருச்சபை அறிவுறுத்துகின்றது. நம் ஆண்டவர் நமக்கு வாக்குறுதி கொடுத்த உயிர்த்தெழுதல் பற்றியும், நிலைவாழ்வைப் பற்றியும் நினைத்துப் பார்க்க ஒரு வாய்ப்பாக இன்றைய நாள் அமையட்டும்.
 
‘‘மணவைப்பிரியன்’’ ஜெயதாஸ் பெர்னாண்டோ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Trump_japan11

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்

 • kashmir_kola11

  தீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்

 • 20aacident_died11

  சூரத்தில் கல்வி பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து: 20 பேர் பரிதாப பலி

 • 27-05-2019

  27-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-05-2019

  26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்