நறுமணம் பெற ஒருமனதாயிருப்போம்!
கருத்துகள்
ஒருநாள் உடல் உறுப்புகள் எல்லாம் சேர்ந்து வயிற்றோடு சண்டையிட்டன. ‘‘நீ மட்டும் எந்த வேலையும் செய்யாமல் மூன்று வேளையும் நன்றாக சாப்பிடுகிறாய். ஆகவே இனிமேல் நாங்களும் எந்த வேலையும் செய்யப் போவதில்லை’’ என வயிற்றிடம் சொல்லிவிட்டன. அன்று முதல் கால் உணவை தேடிச் செல்லவில்லை. கை உணவை எடுக்கவில்லை. வாய் சாப்பிடவில்லை. ஆனால், வயிறு இதைக்குறித்து கவலைப்படவே இல்லை. நாட்கள் செல்ல செல்ல உடல் உறுப்புகள் எல்லாம் பலம் இழந்து போயின. உண்மையை அறிந்துகொண்ட உறுப்புகள் வயிற்றிடம் வந்து மன்னிப்பு கோரி அன்று முதல் ஒற்றுமையாய் வாழ ஆரம்பித்தன; பழைய வலிமையைவிட பல மடங்கு புது வலிமை பெற்றன.
நமக்கு ஒரே சரீரத்திலே அநேக அவயங்கள் இருந்தும் எல்லா அவயங்களுக்கும் ஒரே தொழில் இராததுபோல, அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம் (ரோமர் 12: 4, 5). ஆதிசபையில், ‘‘விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார், ஒரே இருதயமும் ஒரே மனமுள்ளவர்களாயிருந்தார்கள். வீடுகள் தோறும் அப்பம் சுட்டு விநியோகித்து மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம் பண்ணினார்கள்’’ என்று வேதம் சொல்கிறது.
இந்த நாட்களில் எல்லா இடங்களிலும் ஒற்றுமை வலிமையிழந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பது ஒற்றுமை! நாம் எல்லாரும் ஒவ்வொரு உறுப்பாய் காணப்படுகிறோம். எல்லா உறுப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தானே ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமாக இயங்கும்? பணக்காரனென்றும் ஏழையென்றுமில்லை. உயர்ந்தவனென்றும் தாழ்ந்தவனென்றுமில்லை. ஆணென் றும் பெண்ணென்றும் வித்தியாசமில்லை. நாம் எல்லாரும் கிறிஸ்துவுக்குள் ஒன்றாயிருக்கிறோம் -ஒரே உடம்பின் பல உறுப்புகள் போல.
‘‘சகோதரரே, நீங்கள் யாவரும் ஒரே காரியத்தைப் பேசவும் பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏக யோசனையும் உள்ளவர்களாய், சீர் பொருந்தியி ருக்கவும் வேண்டுமென்று நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களை வேண்டிக் கொள்கிணறேன் (2 கொரி 13: 11). நீங் களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும் இரக்கமுள்ளவர்களும் சகோதர சிநேகமுள்ளவர்களும் மன உருக்கமுள்ளவர்களும் இணக்கமுள்ளவர்களுமாய் இருங்கள்’’(1 பேதுரு 3: 8).
பரமன்குறிச்சி பெவிஸ்டன்


























முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!