நான்கு யுகமாய் நன்மைகள் நல்கிவரும் நாதன்
கருத்துகள்
திருச்செங்கோடு
திருச்செங்கோடு மலைக் கோயிலான அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலை அறிந்த அளவிற்கு கீழ் கோயிலை வெளியூர் பக்தர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். நிலத்தம்பிரான் என்றழைக்கப்படும் இந்தக் கீழ்க்கோயிலான கைலாசநாதர் ஆலயத்தை வணங்கிய பிறகே மேல் கோயிலுக்குச் செல்ல வேண்டுமென்ற நியதி தொன்று தொட்டு நிலவி வருகின்றது. நிலத்தம்பிரான் சதுர்யுகங்க ளாக பூஜிக்கப்படுபவர். கிருத யுகத்தில் பிரம்மன் இவரை பூஜித்துப் படைப்புத் தொழிலைப் பெற்றார். திரேதா யுகத்தில் விஷ்ணு பூஜை செய்து காக் கும் தொழிலைப் பெற்றார். துவாபர யுகத்தில் துர்க்கை இவரை பூஜித்து மகிஷாசுரனை வதம் செய்த பாவத்தைப் போக்கிக் கொண்டாள்.
கலியுகத்தில் நாகம் பூஜை செய்து நாக மணியைப் பெற்றது. பஞ்சபாண்டவர்கள் திருச்செங்கோட்டு தெய்வங்களை வழிபட்டதன் பலனாக மீண்டும் அரசுரிமையைப் பெற்றனர். பதஞ்சலியும் வியாக்ரபாதரும் பூஜித்த தலம் என்பதை உணர்த்த முருகன் கோயில் விமானத்தில் இருவரும் அர்த்தநாரீஸ்வரரை பூஜித்தபடி நிற்கும் சிற்பங்களும் மூலவர் கைலாசநாதரின் வலப்பக்க நுழைவு வாயிலின் முன் உள்ள மண்டபத்தூண்களில் புலிக்கால் முனிவர் பூஜைமணி ஓசையுடன் இறைவனை துதிக்கும் புடைப்புச் சிற்பமும் கோயிலின் தொன்மைக்கு சான்றாக விளங்குகின்றன. திருச்செங்கோட்டில் வைகாசி மாதம் தேர்த் திருவிழா 14 நாட்கள் நடைபெறும்.
இந்த விழாவின் 4ம் நாள், சுவாமி தன் பரிவாரத் தெய்வங்களுடன் மலைக் கோயிலிலிருந்து எழுந்தருளி கீழே வருவார். நகர்வலம் வந்தபின் 7ம் நாள் கைலாசநாதர் திருக்கோயிலுக்குள் எழுந்தருள்வார். ஒன்பதாம் நாள் தேர் ஏறி நான்கு ரத வீதிகளையும் சுற்றி வந்தபின் 14ம் நாள் கைலாசநாதர் ஆலயத்துக்குள் எழுந்தருள்வார். நான்கு கால் மண்டபத்தில் ஊஞ்ச லாடி, மலையடிவாரத்தில் ருத்ராட்ச மண்டபத்தில் சுவாமி மாலை மாற்றி அதிகாலை இருள் பிரியும் வேளை திருமலைக்கு எழுந்தருளுவார். ஊரிலுள் ளோர் நிகழ்த்தும் சுபவிசேஷங்கள் அனைத்துக்குமே முதல் அழைப்பிதழ் இந்த கைலாசநாதருக்குதான் சமர்ப்பிக்கப்படும். அதாவது, அந்த நிகழ்ச் சிக்கு அவருடைய முதல் ஆசி தேவை என்பதை ஊர் மக்கள் பரிபூரணமாக உணர்ந்திருக்கிறார்கள்.
நிலத்தம்பிரான் மற்றும் மலைத்தம்பிரான் இருவ ரும் உருவத்தில் வேறுபட்டாலும் அவ்விருவரும் எல்லோர் உள்ளத்திலும் நீங்காத இடம் பெற்றிருக்கிறார்கள்.
மலைக் கோயிலைக் கட்டிய அத்தனை புண்ணிய சீலர்களும் நிலக்கோயிலை கட்ட பெருமளவு உதவியுள்ளார்கள். கலியுக தொடக்கத்தில் சிங்கவன்ம னால் திருப்பணி செய்யப்பட்ட கோயிலை சௌந்தரபாண்டியன் திருப்பணி செய்து தெற்கு வாயில் கோபுரத்தைக் கட்டியுள்ளான். அவனைத் தொடர்ந்து சோழன் திருப்பணிகள் செய்து கைலாசநாதரை புதிதாக பிரதிஷ்டை செய்துள்ளான். பாண்டியன் மலை மீது திருப்பணிகள் பல ஆற்றியதோடு நில்லா மல் அதன் உபகோயிலாக கைலாசநாதர் ஆலயத்தையும் கட்டி முடித்தான்.
ராஜ கோபுரம் கடந்து உள்ளே நுழைந்தவுடன் கண்முன் விரியும் பிராகாரத்தில், பிராகார நந்தி சிற்ப வேலைப்பாடு மிக்க மண்டபத்துள் திருக்காட்சி அளிக்கக் காணலாம். பிராகாரச் சுற்றில் மூலவருக்கு வடபுறம் சொக்கப்ப முதலியார் அரங்கமும் விநாயகர் சந்நதியும் காணப்படுகின்றன. மூலக் கோயிலுக்கு அடுத்து இடதுபுறம் பரிமளவல்லி என்ற சுகந்த கூந்தலாம்பிகை அம்மன் சந்நதி உள்ளது. மூலவரான கைலாசநாதர் லிங்க ரூபத்தில் பேரருள் பொழிகிறார். அம்மையோ கருணை பொங்க, வருவோரின் மனதில் நிம்மதி கூட்டி அகத்தை குளிரவைக்கிறாள். அம்மனின் மகா மண்டபத்தூண்கள் நான்கிலும் அதைக் கட்டுவித்த புண்ணிய சீலர்களின் சிலா வ ரூபங்கள் அலங்கரிக்கின்றன.
கிழக்கு ராஜ கோபுரத்தின் இடப்புறத்தில் இதற்குமுன் வழிபடப்பட்டுவந்த அம்மன் வழிபாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளாள். நான்கு அடி உயரம். கண் களை விட்டு அகலாத அழகுத் திருவுருவம். ஒரு காலத்தில் கருவறைக்குள் அருளாட்சி செய்து மாபெரும் மன்னர்களின் பிரார்த்தனைகளை ஏற்றுக் கொண்டு வரமளித்த அன்னை இவள். அந்த பாரம்பரியத்தை உணரும் இதயம், ‘எனக்கும் வரம் அருள் தாயே’ என்று கெஞ்சுகின்றது. இந்த ஆலயத்தின் முன்புறம் ஆலமரத்தடி, வேப்ப மரத்தடியில் கோயில் கொண்டுள்ள இரட்டை பிள்ளையார்கள், திருமணத் தடைகளை நீக்க வல்ல வராகத் திகழ்கின்றனர்.
இவர்களுக்கு மாலை சாற்றி கற்பூரம் ஏற்றி வழிபட்ட பத்து நாட்களுக்குள் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விடுகின்ற பேரதிசயம் நடைபெறுகிறது. மணமான பிறகு மறக்காமல் தம்பதி சமேதரராக வந்து மறுமுறை மாலையிட்டு தம்மாலியன்ற வழிபாட்டினை செய்து நன்றி தெரிவித் துச் செல்லும் நிறைய புதுமண ஜோடிகளைக் காணமுடிகிறது. நிலத்தம்பிரான் ஆலயத் தொடர்புக்கான தொலைபேசி எண்: 04288 - 255925.


























முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!