SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இவரே என் அன்பார்ந்த மகன்

2013-12-11@ 16:00:48

''படைகளின் ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது! என் ஆன்மா ஆண்டவரின் கோயில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது.  என் உள்ளமும் உடலும் என்றுமுள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது. உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர். வேற்றிடங் களில் வாழும் ஆயிரம் நாள்களிலும் உம் கோயில் முற்றங்களில் தங்கும் ஒருநாளே மேலானது’’(திருப்பாடல்கள் 24: 1-4, 19). வேதனையில் மீட்பளிக்கும் வல்லமையின் அடையாளமாகச் சிலுவை திகழ்கின்றது. துன்பத்தை நன்மையாக மாற்றிய இயேசு கிறிஸ்துதான் இதன் கார ணம். தமது வேதனை மற்றும் சவால், ஆண்டவர் இயேசு, மனிதர் அனைவரின் வேதனையும் பாவங்களையும் தாமே ஏற்றுக்கொண்டார்.

நமது வாழ்வின் குறிக்கோள், நாம் இயேசுவை நோக்கி வளர வேண்டும் என்பதுதான். வாழ்வைக் கையளித்து வாழ்வைப் பெற்றுக்கொள்வதைத்தான்  ஆண்டவர் இயேசு கற்றுத் தந்தார். இறைவனுக்கு ஏற்புடைய காரியங்கள் மட்டும்தான் நம்மிடம் இருக்க வேண்டும். இயேசு சீடரிடம், ‘‘வாருங்கள்  அக்கரைக்குச் செல்வோம்’’ என்றார். ஆம், ஆண்டவர் அவர்களை மறுகரையை நோக்கிய வாழ்வுக்கு ஆயத்தம் செய்தார். மனித வாழ்வு அக்கரையை  நோக்கிய வாழ்வாகும். அது ஒரு நீண்ட திருப்பயணமாகும். நாம் முழுமையாக இறைவனுக்குரியவர் ஆகும்போதுதான் நம்மால் அக்கரைக்குப் பத்திரமாகச் செல்ல முடியும். நமது கண்ணோட்டம் நம்மைச் சார்ந்ததாக இராமல், பிறரது மேம்பாட்டையும் கருத்தில் கொண்டுள்ளதாக இருக்க வேண்டும்.

எல்லாம் நிறைவேறியது சிலுவையில்தான். அச்சிலுவைதான் நம்மை அக்கரைக்குக் கொண்டு செல்லும் படகு. இயேசு உயிர்த்தெழுந்த பின் வெளிப்ப டையாக அறிக்கையிடப்பட வேண்டிய உண்மைதான் அவர் இறைமகன் என்பது. அவர் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு இறந்தால்தான் அவரது  உண்மைத் தன்மை வெளிப்படும். இயேசுவை அறிக்கையிடுபவர்கள் சிலுவை அருகில் இருக்க வேண்டும். இயேசுவோடு எப்போதும் இருக்க வேண்டும். சிலுவை அல்லது துன்பமே, நிறைவின் நுழைவாயில் என்பதை இயேசு மட்டுமே இந்த உலகிற்குக் கற்றுக் கொடுத்தார். துன்பத்தில் மகிழ்ச்சி கண்டவர் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவே. ‘‘மானிடராய் அவர் வெளிப்படுத்தப்பட்டார்; தூய ஆவியால் நேர்மையாளர் என மெய்ப்பிக்கப்பட்டார்;  

வான தூதருக்குத் தோன்றினார்; பிற இனத்தார்க்குப் பறைசாற்றப்பட்டார்; உலகினரால் நம்பிக்கையோடு ஏற்கப்பட்டார்; மாட்சியோடு விண்ணேற்றமடைந்தார்.
ஆண்டவர் தமது அருளையும் ஆசியையும் கொடையாகத் தருவார். அது உலகம் தரும் அமைதி போன்றதல்ல; நிலையான அமைதி இது. நமக்காக  அனைத்தையும் இழந்தவர் இயேசு. உலக முடிவுவரை நம்மோடு இருப்பவர் இயேசு. எப்போதும் இறைவனோடு இணைந்து நல்லுறவு கொண்ட நிலை யில் இருப்போம். இயேசு கிறிஸ்து இறந்ததின் உண்மையான பலனைத் திருவருட்சாதனங்கள் வாயிலாகப் பெற்றுக்கொள்ளும் வரம் அருளப் பெற்ற நாம், இறை அருளை மென்மேலும் வளர்க்க இதய வயலில் அடிக்கடி களைகளை  நீக்க வேண்டும்.

வளரும் நல்ல செடிக்குத் தேவையான ஞான வளத்தோடு கூடிய நீர், உரம் இடவேண்டும். செபம், தியானம் இவை போன்றவையே  இதயத்திற்கு அவசியம்.
வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது நம் குடும்பத்திலிருந்து நமக்கு நிரம்பப் பொருட்களும் வசதிகளும் வந்து குவிகின்றன. பாட்டனார் சொத்து, முப் பாட்டனார் சொத்து, சமூகம், நாடு, உலகம் மற்றும் இயற்கை என்று எத்தனையோ வசதிகள் நம்மை வந்து அடைகின்றன. நாம் இதற்கெல்லாம்  கைம்மாறாக, உலகத்திற்குத் திருப்பிக் கொடுப்பது அதிகமாக இருந்தால்தான் வாழ்க்கைக்கு அர்த்தம் ஏற்படுகிறது. பிற தாவரங்களை அரித்துத் தின்னும் பூச்சிகளைப் போல, சமூகத்திற்கு நாம் எதுவுமே திரும்பச் செய்யாமல் வாழ்ந்தால் உலகத்திற்கு நாம் ஒரு பளுவாகத்தான் இருப்போம்.

நம் அறிவையும் அனுபவங்களையும் பகிர்ந்து உலகத்திற்கு ஈடு செய்யலாம். சமூகத்தையும் உலகத்தையும் அதுபெரும் அளவில் உயர்த்தும். ‘‘நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின் கீழ் மனிதரிடையே இவரது பெயரின்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை’’ என்று திருத்தூதர் சீமோன்  பேதுரு சொன்னது இதுதான். இறை வார்த்தையில் நம்பிக்கை வைத்து கத்தோலிக்க திருச்சபை பறை சாற்றுவதும் இதுதான். இயேசு கிறிஸ்து ஒருவரே மீட்பர். இறைவன் உலகிற்கு இறை வாக்கினர் வாயிலாக வெளிப்படுத்தியவற்றின் நிறைவுதான் இயேசு கிறிஸ்து என்று மறை வாக்குக் கற்பிக்கின்றது. பல முறை பல வழிகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக சொல்லிவிட்டார்.

இயேசு கிறிஸ்துதான் உண்மையான கடவுளை வெளிப்படுத்தியவர். கடவுளும் இறைத்தன்மை கொண்ட தம் ஒரே மகனை, ‘‘இவரே என் அன்பார்ந்த மகன்’’ என்று  வெளிப்படுத்தியுள்ளார். இறைவனின் வெளிப்படுத்தல் இயேசு கிறிஸ்துவில் நிறைவேறியதால்தான் உலகின் பாவங்கள் அனைத்தையும் சுமந்துகொண்டு உலகை மீட்க வேறு எவரையும் நம்மால்  காண இயலாது. கிறிஸ்து ஒருவரே மீட்பர் என்று அறிக்கையிடுவது இறை வார்த்தையை மதிப்பதால்தான். இறைத்தந்தையின் முழுநிறைவும் உடல் உருவில் கிறிஸ்துவுக்குள் குடி கொண்டிருக்கிறது. அவரோடு இணைந்திருப்பதால் நாமும் நிறைவு பெறுகிறோம். இயேசு, ‘‘வழியும் உண்மையும் வாழ்வும்  நானே’’ என்கிறார்.

கட்புலனாகுபவையும், கட்புலனாகாதவையும் இயேசு கிறிஸ்து வழியாக, இயேசு கிறிஸ்துவுக்காகப் படைக்கப்பட்டன. ‘‘அனைத்தும்  அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை.’’ மேகங்கள் சூழ வரப்போகிறவர் இயேசுவே. நமது வாழ்வில் ஏற்ப டும் துன்பங்கள் ஆண்டவரின் சிலுவையோடு நம்மை இணைக்கும் நற்பேறுகள் ஆகும். கடவுள் இந்த உலகத்துச் சொத்துக்கு உரியவர். அவராலேதான் அனைத்தும் உண்டாயின.
கடவுளின் அருள் உலகைப் பராமரிக்கிறது. அந்தப் பராமரிப்பு மனித பலனையும் எதிர்பார்க்கிறது. இந்தப் பலனை அதிகப்படுத்தத்தான் இறைவாக்கி னர்கள் வந்தார்கள்; தீர்க்கதரிசிகள் தோன்றினார்கள்; இறுதியாக கடவுளும் தம் ஒரே மகனையும் உன்னத விதத்தில் அனுப்பி வைத்தார்.

‘‘மகனை மறுதலிப்போர் தந்தையை ஏற்றுக்கொள்வதில்லை. மகனை ஏற்று அறிக்கையிடுவோர் தந்தையையும் ஏற்றுக்கொள்கின்றனர். தொடக்கத்திலி ருந்து நீங்கள் கேட்டறிந்தது உங்களுள் நிலைத்திருக்கட்டும். நீங்கள் கேட்டறிந்தது உங்களுள் நிலைத்திருந்தால் நீங்கள் மகனுடனும் தந்தையுடனும்  இணைந்திருப்பீர்கள். அவரே நமக்கு வாக்குறுதி அளித்துள்ளார். அவ்வாக்குறுதி நிலை வாழ்வு பற்றியதாகும். நீங்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட  அருள் பொழிவு உங்களுள் நிலைத்திருக்கிறது. நீங்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அருள் பொழிவால் அனைத்தையும் கற்றுக்கொள்கிறீர்கள்.  அவ்வருள் பொழிவு உண்மையானது; பொய்யானதல்ல. நீங்கள் கற்றுக்கொண்டதற்கேற்ப அவரோடு இணைந்து வாழுங்கள்’’(1 யோவான் 2: 23-28).

‘மணவைப்பிரியன்’ ஜெயதாஸ் பெர்னாண்டோ

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • WESTERMINSTERbridge

    லண்டன் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பெண்கள் மனிதச்சங்கிலி மேற்கொண்டனர்

  • 700kG20FeetloNGfiSHinMAHA

    20 அடி நீளம், 700 கிலோ எடையுடன் விசித்திரமான மீன் மகாராஷ்டிரா மாநிலம் மீனவர்கள் வலையில் சிக்கியது

  • ausreTRAOLvsinadI24TH

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி - தொடரையும் வென்று அசத்தல்

  • pictures_prot

    மண்டை ஓடுகளுடன் கைகளில் திருவோடு ஏந்தியும், எலிக்கறி தின்றும் டெல்லியில் விவசாயிகள் நூதன போராட்டம்

  • delhi_farmerss11

    டெல்லியில் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவாக திருச்சியில் விவசாயிகள் உண்ணாவிரதம்