SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவல் தெய்வங்கள் : ட்வென்ட்டி 20

2013-12-11@ 16:00:48

விழுப்புரம்-தென்செட்டி ஏந்தலில் அருள்புரியும் சடையப்பர், தன்னை பூஜித்த பூசாரியை பொய் வழக்கிலிருந்து காத்தவர்.

கோவை- கருத்தம்பட்டியில் வாழைத்தோட்டத்து ஐயன் கோயிலில் புற்று மண்ணே பிரசாதம். இந்த மண் விஷங்களை முறிக்கும் அருமருந்தாம்.

ஈரோடு- புதுப்பாளையத்தில் காமாட்சி அம்மை சமேத குருநாத சுவாமியை தரிசிக்கலாம். ஆலய நடுவில் உள்ள புற்று போன்ற குலுக்கை எனும்  பூஜைப்பொருட்கள் உள்ள பெட்டகத்தை பூக்களால் பக்தர்கள் அர்ச்சிக்கிறார்கள். இதனால் பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ ஜந்து பாதிப்பு ஏற்படு வதில்லை என்பது இவர்களது நம்பிக்கை.

கடலூர் மாவட்டம், மெய்யாத்தூரில் சொக்காயி சமேத திருவரசமூர்த்தி கோயிலுக்கு இப்பகுதி மக்கள் புதிதாக வாங்கிய வாகனங்களையும் விதை  நெல்லையும் எடுத்து வந்து பூஜித்த பின்பே பயன்படுத்துகின்றனர்.

ஈரோடு, காஞ்சிக் கோயிலில் சீதேவி அம்மனை தரிசிக்கலாம். ஆனி மாதம் 60 அடி நீளம் கொண்ட குண்டத்தில் வெண்ணிற ஆடை அணிந்து பக் தர்கள் பூக்குழி இறங்குகின்றனர். கால்நடைகளைக் காக்க வெள்ளை குதிரை ஒன்றும் அக்கினி குண்டத்தில் இறங்குகிறது!

தஞ்சாவூர், திருச்சிற்றம்பலத்தில் உள்ள எமதர்மராஜர் கோயிலில் பிறரால் வஞ்சிக்கப்பட்டவர்கள், பொருட்களை திருடு கொடுத்தவர்கள் தங்கள்  பிரார்த்தனையை ஒரு காகிதத்தில் எழுதி, அதை அவர் சந்நதியில் பூஜித்து, அங்குள்ள சூலத்தில் கட்டி விட்டால் சில நாட்களில் அவை திரும்பக்  கிடைத்து விடுகின்றன. இந்த நடைமுறையை ‘படி கட்டுதல்’ என்கிறார்கள்.

புதுக்கோட்டை, மாங்குடியில் நருவிழி அம்மன் சமேத சாத்தையனாரை தரிசிக்கலாம். இங்கு ஆடி மாத புரவி எடுப்பு திருவிழாவும், செவ்வாய் திருநா ளில், சாத்தையனாருக்கு விசேஷ பூஜைகளும் எருதுகட்டி எனும் மஞ்சுவிரட்டும் நடைபெறுகின்றன.

திருச்சி-மணப்பாறையில் மாமுண்டி எனும் நல்லாண்டவர் அருளாட்சி புரிகிறார். இவர் கருவறை அருகே உள்ள சந்நதியில் கொலுவிருக்கும், இவரின்  சகோதரிகளாக பாவிக்கப்படும் சப்தகன்னியருக்கே இங்கே முதல் பூஜை.

திருப்பூர்- மேட்டுப்பாளையத்தில் நாட்ராயர்-நாச்சிமுத்து கோயிலில் தம் பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள், குதிரை, மனித சிலைகளோடு லாரி  வாகன சிலை கூட வைத்துள்ளனர். தீயசக்தியால் பாதிக்கப்பட்டவர்கள் இவர் சந்நதி முன் வர, அந்த பாதிப்புகள் விலகுகின்றன.

விருதுநகர்-கோட்டையூரில் பூரணா, புஷ்கலாம்பா தேவியருடன் வைகுண்டமூர்த்தி தரிசனம் தருகிறார். இங்கு தர்மசாஸ்தா, ஐயனார் என இரு திருவு ருவங்களோடு இறைவன் அருள்கிறார். மாசி மாத அமாவாசையை ஒட்டி பாரி வேட்டை விழா நடைபெறுகிறது.

மதுரை-அம்பலக்காரன்பட்டியில் வல்லடிக்காரர் அருள்புரிகிறார். இங்கு, பூதத்தின் தோள் மீது முன்னங்கால்களைத் தூக்கி வைத்தபடி காட்சி தருகி றது, சேமங்குதிரை. ஆங்கிலேயர் ஒருவர் கேலி செய்ததால் அந்த சிலை புல்லைத் தின்று, கனைத்தும் காட்டியது. ஆகவே, வல்லடிக்காரருக்கு சம மாக குதிரையும் வணங்கப்படுகிறது.

கடலூர்-திருநாரையூரில் தன் தேவியருடன் ஐயனார் அருள்பாலிக்கிறார். பக்தர்களை ஆபத்துகளிலிருந்து காப்பதால் இவர் ‘மங்காமல் காத்த ஐய னார்.’ பிரசவ வலியால் துடித்த ஒரு பெண்ணிற்கு தாதியாக வந்து பிரசவம் பார்த்த பெருங்கருணையுடையவர் இந்த ஐயனார்.

சிவகங்கை மாவட்டம், பெரிச்சி கோயிலில் இரட்டை முக பைரவரை தரிசிக்கலாம். நவபாஷாணத்தால் ஆன இவருக்கு சாத்தப்படும் வடைமாலையை  பிரசாதமாகத் தருவதில்லை. சந்நதியின் மேலே எறிந்து விடுகின்றனர். அதை பறவைகளும் உண்பதில்லை. இவரின் பின்முகம், பைரவரின் சீடனான  சனிபகவானை நோக்கியபடி உள்ளதால் அந்த முகத்தை பக்தர்கள் தரிசிக்க முடியாது.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் சேவுகப்பெருமாளை தரிசிக்கலாம். ஆலய உள் பிராகாரத்திலுள்ள கிணறு என்றுமே வற்றியதில்லை. தனக்கு  ஒரு புதரில் கிடைத்த இந்த ஐயனாரை ‘பெருமாளே’ என்று ஒரு வேடன் அழைத்ததால், இவர் சேவுகப்பெருமாள் ஆனார். இவருக்கு வில்வதளத்தால்  அர்ச்சனை நடைபெறுகிறது.

தூத்துக்குடி, காயாமொழியில் கற்குவேல் ஐயனாரை கண்குளிரக் காணலாம். இங்கு கார்த்திகை மாதம் நடைபெறும் கள்ளர்வெட்டு திருவிழா புகழ் பெற்றது.  

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் நீர்காத்த ஐயனார் அருள்கிறார். ராஜபாளையத்தின் நீர்வளத்திற்கு இவரே காரணம் என்பது பொதுவான  நம்பிக்கை.

தேனி, உத்தமபாளையத்தில் பாறையடி முத்துக்கருப்பண்ணரின் ஆலயம் உள்ளது. பக்தர்கள் இவரை தன் தந்தையாகக் கருதி ஐயா என அழைக்கின்றனர். சுவாமியின் காலடியில் வாழை மட்டை யைப் படைத்து அதில் பாதியைப் பிரசாதமாக பக்தர்கள் பெறுகிறார்கள். இதனால் குடும்பம் வாழையடி வாழையாகத் தழைக்கும் என்பது நம்பிக்கை.

சேலம்- வெண்ணங்கொடியில் உள்ள முனியப்பரை, வேல்விலங்கு எனும் சிறிய இரும்புக் கம்பியால் பூஜித்தால் தீயசக்திகளின் பாதிப்புகளிலிருந்து  விடுபடலாம் என நம்பிக்கை. இந்த வழிபாடு கட்டுவர்த்தனம் என அழைக்கப்படுகிறது.

பெங்களூரு, விபூதிப்புரத்தில் வீரபத்திரரை காளிகாம்பாளோடு தரிசிக்கலாம். தலைக்கு மேலே லிங்கமூர்த்தி உள்ளதால் இவர், லிங்கவீரபத்திரர்.  மனக்
குழப்பம், பயங்களை வீரபத்திரரும் மழலைப் பேறு தடையை காளிகாம்பாளும் விரட்டுகிறார்கள்.

மதுரை, மடப்புரத்தில் காளிதேவி திருவருள்பாலிக்கிறாள். இங்கு காசு வெட்டிப்போடும் பிரார்த்தனை புகழ்பெற்றது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • greexe_111

    கிரீ்ஸ் நாட்டின் தனாகரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • octo_111

    ஜெர்மனியில் களைகட்டியது அக்டோபர் ஃபெஸ்ட் : உலகின் அனைத்து வகையான பீர்களை ருசித்து மகிழும் பீர் திருவிழா

  • batman_tshirt11

    காமிக்ஸ் உலகின் நாயகன் பேட்மேன் வயது 80 : பேட்மேன் வேடம் அணிந்து ரசிகர்கள் உற்சாகம்; சிக்னல்கள், டி.சர்ட்டுகளில் பளிச்சிட்ட பேட்மேன்

  • circle_of_lightss1

    மாஸ்கோவில் ஒளிவட்டம் திருவிழா : மின்னும் விளக்கொளியில் மாயத் தோற்றங்களை கண்டு ரசித்த மக்கள்

  • climate_strike11

    பருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளில் பேரணி : பூமியைப் பாதுகாக்க கோரி பதாகைகளை ஏந்தி இளைஞர்கள் முழக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்