SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

என்னென்ன வகை சாபங்கள் இருக்கின்றன?

2018-10-22@ 17:18:04

1) பிரம்ம சாபம்

நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது, இந்த காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது. பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பில் வளர்ச்சி இல்லாமல் போகும்.

2) பெண் சாபம்

பெண்களை ஏமாற்றுவதாலும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருவது. பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.

3) பிரேத சாபம்

இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், சடலத்திற்கான இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை, அவருக்கு வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும். பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.

4) சர்ப்ப சாபம்

பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும், சர்ப்ப சாபம் உண்டாகும். இதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படும்.

5) பித்ரு சாபம்

முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்-தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும், அவர்களை ஒதுக்கி வைப்பதும், பித்ரு சாபத்தை ஏற்படுத்தும். பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் உண்டாக்கி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்ற துர்பலன்களை ஏற்படுத்தும்.

6) கோ சாபம்

பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது, கன்றிடமிருந்து தாய்ப் பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும். இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.

7) பூமி சாபம்

ஆத்திரத்தில் பூமியை காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், மக்காதப் பொருட்களைப் போட்டுப் புதைப்பதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும், பூமி சாபத்தை உண்டாக்கும். பூமிசாபம் நரகவேதனையைக் கொடுக்கும்.

8) கங்கா சாபம்

பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும். கங்கா சாபம் பெற்றவர்கள், குடிநீர் வேண்டிப் பெரிதும் துன்பப்பட வேண்டியிருக்கும். எவ்வளவு ஆழத்துக்குத் தோண்டினாலும் நீர் கிடைக்காது.

9) விருட்ச சாபம்

பச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும், விருட்ச சாபத்தை ஏற்படுத்தும். விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.

10) தேவ சாபம்

தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.

11) ரிஷி சாபம்

இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும். ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.

12) முனி சாபம்

எல்லை தெய்வங்கள் மற்றும் சின்ன சின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும். முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.

13) குலதெய்வ சாபம்

இதனை நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பதால் தவிர்க்கலாம். குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். எப்போதும் ஒருவகை துக்கம் சூழ்ந்து கொள்ளும். இவையெல்லாம் ஒருபக்கம் இருக்க, ஆற்றாமல் அழுது பதறிய ஒரு நெஞ்சிலிருந்து வரும் வார்த்தை சாபமாக மாறி எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் அழித்துவிடும் என்பதும் உண்மையே!

- வேதவல்லி, மந்தைவெளி

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • hailstrom

    தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

  • bookday

    இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

  • ukraine

    உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

  • londonprotest

    லண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்

  • 23-04-2019

    23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்