நவராத்திரி கொலு துவங்கியதையொட்டி மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு
2018-10-11@ 15:07:04

ஓசூர்: ஓசூர்-தேன்கனிக்கோட்டை சாலை, மத்திகிரி கூட்ரோட்டில் அமைந்துள்ள பழமைவாய்ந்த சுயம்பு கோட்டை மாரியம்மன் கோயிலில், நேற்று நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இக்கோயிலில் மகாளய அமாவாசை முதல் விஜயதசமி வரையில் அம்மனுக்கு தினமும் சிறப்பு அலங்காரம் செய்து பக்தர்கள் வழிபாடு நடத்துவது வழக்கம்.
இந்த ஆண்டும் நவராத்திரி விழாவை முன்னிட்டு கடந்த 8ம் தேதி முதல் 19ம் தேதி வரை தினமும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு பூஜையின் இரண்டாம் நாளான நேற்று அம்மனுக்கு 10 ஆயிரம் வளையல்களை மாலையாக அணிவித்து பட்டாடை உடுத்தி ஆபரணங்கள் அணிந்து வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. ஓசூர், தேன்கனிக்கோட்டை மத்திகிரி, பாகலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரகணக்கான பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் மாசி திருவிழா கொடியேற்றம் : பக்தர்கள் திரளாக பங்கேற்பு
வடுவூர் வடபாதி கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்
பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயிலில் ரதசப்தமியை முன்னிட்டு சுவாமி வீதி உலா
அண்ணாமலையார் கோயிலில் காவடி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
வேதபுரீஸ்வரர் கோயிலில் ரதசப்தமி பிரமோற்சவ தேரோட்டம் : திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
கும்பகோணம் சக்கரபாணி கோயிலில் 97 ஆண்டுகளுக்கு பிறகு சுழலும் சூரியபிரபையில் சுவாமி வீதியுலா
16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்
பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு
முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு
டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி