SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துர்க்கையை நாம் எவ்வாறு வழிபடலாம்?

2018-10-10@ 09:45:39

ராகு - கேது பெயர்ச்சியால் சில பிரச்னைகள் வருமானால் அவற்றை நிவர்த்தி செய்துகொள்ள துர்க்கை வழிபாடு செய்தால் போதுமானது என்பார்கள் நம் முன்னோர்கள். ஒவ்வொரு கிழமையிலும் அவ்வாறு வழிபாடு செய்யும் முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமையில் துர்க்கை சந்நதியில் மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் புதிய வெள்ளைத் துணியில் திரி செய்து, விளக்கேற்ற வேண்டும். சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கி, செல்வம் பெருகி எல்லா நலன்களும் உண்டாகும்.

திங்கட்கிழமையில் காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் துர்க்கைக்கு வெண்ணெய் காப்பு செய்து வெண் பொங்கல் நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் மூட்டு சம்பந்தமான நோய் நீங்கும் என்பதும், வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு கிட்டும் என்பதும் நம்பிக்கை.

செவ்வாய்கிழமையில் மாலை 3 மணி முதல் 4.30 மணிக்குள் வடக்கு முகமாக தீபமேற்றி, தக்காளி சாதம் நைவேத்யம் செய்து துர்க்கையை வழிபட வேண்டும். இதனால் மாங்கல்ய பலமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்று நம்பிக்கை.

புதன்கிழமையில் மதியம் 12 மணி முதல் 1.30 மணிக்குள் பஞ்சில் திரி செய்து, விளக்கேற்றி, புளியோதரை நைவேத்யம் செய்து துர்க்கையை வழிபட வேண்டும். இதனால் பதவி உயர்வு கிட்டும்; ரத்த சம்பந்தமான நோய் தீரும் என்பது நம்பிக்கை.

வியாழக்கிழமையில் மதியம் 1.30 மணி முதல் 3 மணிக்குள் விளக்கேற்றி, எலுமிச்சம்பழ சாதம் நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிட்டும். இதய சம்பந்தமான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

வெள்ளிக்கிழமையில் காலை 10.30 மணி முதல் 12.00 மணிக்குள் துர்க்கையை வழிபட மற்ற நாட்களைவிட மிக ஏற்ற காலம். எலுமிச்சம் பழத்தைப் பிழிந்துவிட்டு, அதை குழிவாகச் செய்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பஞ்சில் திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். தேங்காய் சாதம் அல்லது பாயசம் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் தீராத துன்பம் தீரும். மாங்கல்ய பலம் பெருகும் என்பது நம்பிக்கை.

சனிக்கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் மஞ்சள் துணி திரியில் விளக்கேற்றி, காய்கறி கலந்த அன்னத்தை நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் வேலை வாய்ப்பு கிட்டும், அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர், சிறுநீரக கோளாறு நீங்கும் என்பது நம்பிக்கை. மேலே குறிப்பிட்ட நேரங்கள் அந்தந்த கிழமையின் ராகுகாலமாகும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்