SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காமன் டோக்ளா

2018-10-08@ 16:52:53

என்னென்ன தேவை?    

கடலை மாவு - 2 கப், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, ரவை - 2 டீஸ்பூன், ஃப்ரூட் சால்ட் - 1 சிறிய பாக்கெட், தயிர் - 1/2 கப், பொடித்த பச்சைமிளகாய், துருவிய இஞ்சி - தலா 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 1-2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, சர்க்கரை - 1 டீஸ்பூன். தாளிக்க: கடுகு - 1 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், கீறிய பச்சைமிளகாய் - 2, பெருங்காயத்தூள் - சிறிது, தேங்காய்த்துருவல், பொடித்த மல்லித்தழை - தேவைக்கு, சர்க்கரை + தண்ணீர் - தலா 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் கடலை மாவு, உப்பு, சர்க்கரை, ரவை, மஞ்சள் தூள், எண்ணெய், இஞ்சி, பச்சைமிளகாய், தயிர் அனைத்தையும் கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். பின்பு அதனுடன் ஃப்ரூட் சால்ட் சேர்த்து உடனே பொங்கி வரும்போது மாவைக் கலந்து எண்ணெய் தடவிய குக்கர் தட்டில் ஊற்றி, விசில் போடாமல் ஆவியில் 15 நிமிடம் வேகவைத்து எடுத்து கேக் போல் ஓரத்தை வெட்டி எடுக்கவும்.

கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, சீரகம், பச்சைமிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து சர்க்கரை + தண்ணீர் சேர்த்து கலந்து டோக்ளாவின் மேல் பரவலாக ஊற்றி கொத்தமல்லி, தேங்காய்த்துருவல் தூவி அலங்கரித்து துண்டுகள் போட்டு பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

  • train18modi

    டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்