SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாபநாசத்தில் தீப வழிபாடு

2018-10-08@ 15:47:14

வி.கே.புரம்: தாமிரபரணி புஷ்கர விழா அக்.11ம் முதல் 22ம் தேதி வரை நடைபெற உள்ளதையொட்டி பாபநாசம் சித்தர்கள் கோட்டம் சார்பில் பாபநாசத்தில் கால்நாட்டு வைபவத்துடன்  கடந்த 4ம்தேதி தொடங்கியது. 5ம்தேதி  திருவாசகம் முற்றோதலும் நேற்று முன்தினம் வீரவநல்லூர் நமச்சிவாய அருட்பணி மன்றம் சார்பில் சிவஞானம் சார்பிலும் வி.கே.புரம் சிவந்தியப்பர் கோவில் சுக்ரவார உழவாரகுழு சார்பிலும் தேவார பாராயணம் நடந்தது. நேற்று மாலை நெல்லை மாவட்ட ஆதிபராசக்தி மன்றம் சார்பில் மாவட்ட தலைவர் திருமலை தலைமையில் தீபவழிபாடு நடந்தது.

தொடர்ந்து தாமிரபரணி நதியில் பூக்களை விட்டு தீப ஆர்த்தி  ராஜேஸ்னீஸ்வரசுவாமி தலைமையில் நடந்தது. இன்று (8ம்தேதி) ஐயப்ப சேவா சங்கம் சார்பில் ஐயப்ப வழிபாடு, 9ம்தேதி அருட்பா பாராயணம், 10ம்தேதி  மாணவர்களுக்கு தாமிரபரணி காப்போம் என்பது பற்றிய கட்டுரை, கவிதை போட்டிகள் நடக்கிறது.
அக்.11 முதல் 22ம்தேதி வரை தினமும் மாலை தமிழ் ஆமக முறைப்படி தாமிரபரணியில் 16 வகையான தீபஆரத்தி நடக்கிறது. இதில் முருகநாதன்சுவாமி, தங்கமணிசுவாமி நிதிக்குகுழு தங்கத்துரை, வரவேற்பு குழு ஆசிரியர் பால்ராஜ், சங்கரநாரயாணன், பாரதிகண்ணன் உள்ளிட்ட திரளானவர்கள் பங்கேற்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • LuklaAirportNepal

    சிறிது கவனம் சிதறினாலும் 2,000 அடி பள்ளத்தில் விழ நேரிடும் உலகின் அபாயகரமான நேபால விமான நிலையம்!

  • ParliamentAttaCK17

    நாடாளுமன்றத் தாக்குதலின் 17ம் ஆண்டு நினைவு நாள்: வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தலைவர்கள் அஞ்சலி

  • effiltowergunfire

    ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு ஸ்ரார்ஸ்பேர்க் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

  • FirstSnowFallShimla

    குளிர்காலத்தின் முதல் பனிப்பொழிவை பெற்றுள்ள சிம்லா நகரம்...: இயற்கையின் மகிமையை பறைசாற்றும் புகைப்படங்கள்

  • natioanalmemeoryday

    நாஞ்சிங் படுகொலையில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வகையில் சீனாவில் தேசிய நினைவு தினம் அனுசரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்