SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமண தடை நீக்கும் புத்துமாரியம்மன்

2018-09-21@ 09:37:25

உலகத்தையே ஆண்டு கொண்டிருக்கும் சிவபெருமானுக்கே சக்தி கொடுக்கும் அன்னை பராசக்தி தனது அருளாட்சியால் பக்தர்களை பலவித துன்பங்களில் இருந்து பாதுகாத்து வருகிறாள். அவளது பல்வேறு அவதாரங்களில் ஒன்றுதான் மாரியம்மன். புற்றில் அவதரித்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதால் அவளது பெயர் புத்துமாரியம்மன் என மருவி விட்டது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இங்கு மூலவராக அருள்பாலித்து வருபவர் புத்துமாரியம்மன். இங்கு மூலவர் தவிர உற்சவர் அம்மன், விநாயகர், தண்டபாணி, வேம்பாயி அம்மன் ஆகிய உபசன்னதிகளும் உள்ளன. கோயில் குளம், கோயில் தேர் போன்றவையும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

பூஜை விபரங்கள்:


இக்கோயிலில் காமிகாகம முறைப்படி இரண்டு காலப் பூஜைகள் நடக்கின்றன. ஆடி மாதம் செடல் திருவிழா 9ம் நாள் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. 10 ம் நாள் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்கும் தேரோட்டம் நடைபெறுகிறது. அலங்கரிக்கப்பட்ட தேரில் புத்துமாரியம்மன் அமர்ந்து நகர்வலம் வருவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனின் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசிப்பது சிறப்பான ஒன்று. ஐப்பசி, மாதம் அம்பு உற்சவம்9 ம் நாள் திருவிழாவாக நடைபெறுகிறது. இந்த கோயிலில் நூற்றாண்டு பழமையான வேப்பமரம் தல விருட்சமாக உள்ளது.

தல வரலாறு:

இந்தக்கோயில் சுமார் 500 வருடங்கள் பழமையானது என்று இப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 1963ம் ஆண்டு முதன் முதலாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போதைய காஞ்சி சங்கராச்சாரியார் முன்னிலையில் யந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டு அம்மன் சிலைக்குள் வைக்கப்பட்டது. 1963க்கு முன்பு வரை பழைய கருங்கல்லால் வடிக்கப்பட்ட புத்து மாரியம்மனை பக்தர்கள் வழிபட்டு வந்தனர். 1963ம் ஆண்டில் கும்பாபிஷேகத்தின்போது புதிய சிலை வைக்கப்பட்டு காஞ்சி பெரியவர் தலைமையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பழைய கற்சிலை கோயிலின் ஒருபகுதியில் வைக்கப்பட்டு அதற்கும் வழிபாடு நடத்தப்படுகிறது.

சிறப்புகள்:

இந்தக்கோயிலுக்கு வந்து அம்மனை மனமுருக வேண்டினால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். மேலும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். தீராத நோய்கள் தீரும், கல்வி, தொழில் தடை நீங்கி மனதில் நினைத்த காரியங்கள் எல்லாம் நடக்கும். மனசஞ்சலங்கள் நீங்கி அனைத்து செல்வங்களும் நம்மை நாடி வரும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். மேலும் வேண்டுதல் நிறைவேறியவர்கள் முக்கிய தினங்களில் வந்து வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். இக்கோயிலுக்கு கிழக்கு மூலையில் கோலசுவாமிகள் சமாதியும், திருக்கோவிலும் உள்ளது. விழப்பள்ளம் சுப்புராயர் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்த வள்ளலார் இக்கோயிலுக்கும் வந்து வழிபட்டதாக ஆன்மிக பெரியோர்கள் தெரிவிக்கின்றனர். பல்வேறு ஆன்மிக பெரியவர்களையும், சித்தர்களையும் வரவழைத்து அவர்களுக்கு அருள்பாலித்துக் கொண் டிருக்கும் புத்துமாரியம்மனின் அற்புதங்கள் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.

செல்வது எப்படி?


கடலூர் விருத்தாசலம் சாலையில் உள்ள குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் புத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bji

  முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

 • suvami

  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

 • mango

  கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

 • earth

  சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

 • airshow

  பாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்