அவல் புட்டு
2018-09-19@ 14:32:20

தேவையான பொருட்கள்
அவல் - 1 கப்
துருவிய வெல்லம் - 1 கப்
துருவிய தேங்காய் - அரை கப்
துவரம் பருப்பு - அரை கப்
நெய் - 1 தேக்கரண்டி
முந்திரிப் பருப்பு - தேவைக்கேற்ப
நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
கேசரி மஞ்சள் கலர் - 2 சிட்டிகை
ஏலக்காய் பொடி - அரை தேக்கரண்டி.
செய்முறை:
அவலை வெறும் கடாலியில் சிவக்க வறுத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். அதில் சிறிது உப்பு, கேசரி பவுடர் சேர்த்து கலந்த இளம் சூடான தண்ணீரை தெளித்து பிசறி வைக்கவும். துவரம் பருப்பை முக்கால் வேக்காட்டில் வேகவைத்து தண்ணீரை வடித்து, பருப்பை ஈரமில்லாமல் பிழிந்து தனியே வைக்கவும். நெய்யில் முந்திரிப் பருப்பை வறுத்து எடுக்கவும். ஒரு கடாயில் வெல்லத்தைப் போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு சூடாக்கவும். வெல்லம் கரைந்ததும், வடிகட்டி மறுபடியும் கடாயைக் கழுவி அதிலேயே வெல்லக் கரைசலைக் கொட்டி, பாகு வரும்வரை கிளறவும். இளம் உருண்டைப் பாகு வரும்போது தேங்காய்த் துருவல், துவரம் பருப்பு சேர்த்து கலந்து விட்டு பிசறிய அவல் பொடியைச் சேர்க்கவும். நன்றாகக் கிளறி விட்டு, ஏலக்காய்ப் பொடி, வறுத்த முந்திரி, நல்லெண்ணெய் சேர்த்து உதிரியாக வரும்வரை கிளறி எடுக்கவும்.
மேலும் செய்திகள்
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
காய்கறி சாதம்
சர்க்கரைப் பொங்கல்
மிளகு சாதம்
ஆஞ்சநேயர் மிளகு வடை
தவா கிரில்டு டோஃபு
கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி
ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு
கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்
பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்