SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2018-09-14@ 17:22:29

செப்டம்பர் 15, சனி   

சஷ்டி விரதம். குலச்சிறையார். தல்லாகுளம் ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ராமாவதார திருக்கோலம். ஒப்பிலியப்பன் கோயில் ஸ்ரீநிவாசப் பெருமாள் காலை வெள்ளிப் பல்லக்கில் திருவீதியுலா.

செப்டம்பர் 16. ஞாயிறு  

பாதூர் கருடன். வலங்கைமான் மகாமாரியம்மன் தெப்பம். நெல்லுச்சேரியில் சூரிய பூஜை ஆவணி 31 முதல் புரட்டாசி 2  வரை. ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் சேஷ வாகனத்தில் பவனி. திருப்பதி ஏழுமலையப்பன் காலை கற்பக விருட்ச வாகனத்திலும் இரவு சர்வ பூபாள வாகனத்திலும் திருவீதியுலா.

செப்டம்பர் 17. திங்கள்  

தூர்வாஷ்டமி. ஜேஷ்டாஷ்டமி.  புரட்டாசி மாதப் பிறப்பு. ஷடசீதி புண்ய காலம். உப்பிலியப்பன் கோயில் பல்லக்கு. திருமலை திருப்பதி, சென்னை பைராகி மடம் காலை பல்லக்கில் மோஹினி அவதாரம்; இரவு கருட சேவை.  மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி புறப்பாடு. நந்தனார் குரு பூஜை. லட்சுமி விரதாரம்பம். திருப்பதி ஏழுமலையப்பபன் மோகினி அலங்காரம். திருவஹீந்திரபுரம் தேசிகர் வெண்ணெய்த்தாழி சேவை.

செப்டம்பர் 18, செவ்வாய்   

திருப்பதி, சென்னை பைராகி மடம் காலை ஹனுமந்த சேவை. மாலை வஸந்தோற்ஸவம்; இரவு யானை வாகனம். மதுரை தல்லாகுளம் ஸ்ரீபிரசன்ன வேங்கடேசர் ராஜாங்க சேவை. கேதார விரதம் ஆரம்பம்.

செப்டம்பர் 19, புதன்  

தசமி. கரூர் தான்தோன்றி ஸ்ரீகல்யாண வெங்கடேசப் பெருமாள் திருக்கல்யாணம்; இரவு புஷ்பக விமானத்தில் புறப்பாடு. திருப்பதி, சென்னை பைராகி மடம் காலை சூரியப் பிரபை; இரவு சந்திரப் பிரபை. திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜர் பவித்ர உத்ஸவ ஆரம்பம். கஜலட்சுமி விரதம். உப்பிலியப்பன் கோயில் ஸ்ரீநிவாசப் பெருமாள் மாலை சூர்ணாபிஷேகம்.

செப்டம்பர் 20, வியாழன்  


ஏகாதசி. ஸர்வ ஏகாதசி. சென்னை பைராகி மடம், திருப்பதி ரதம்; இரவு குதிரை வாகனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரிய பெருமாள் குதிரை வாகனத்தில் பவனி.

செப்டம்பர் 21, வெள்ளி  

துவாதசி. திருப்பதி ஸ்ரீவெங்கடேசர் புஷ்கரணியில் சக்கர ஸ்நானம். உத்ஸவ சாற்றுமுறை; தீர்த்தவாரி. திருவோண விரதம். ஸ்ரீவாமன ஜெயந்தி. ஸ்ரீமாதா புவனேஸ்வரி ஜெயந்தி. ஸ்ரீமத் வேதாந்த தேசிகர் சாற்றுமறை. ஸ்ரீ சுகப்பிரம்ம மஹரிஷி, திருவஹீந்திரபுரம் ச்ரவண விசேஷம். மதுரை தல்லாகுளம் பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள், கரூர், தான்தோன்றி ஸ்ரீகல்யாண வெங்கடேசர். உப்பிலியப்பன் கோயில் ஸ்தல ஸ்ரீநிவாசர் ரதம். திருக்கழுக்குன்றம் பவித்ர உற்சவாரம்பம் மூன்று தினம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • MummifiedFoal

  42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

 • SriLankaHomage

  இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு உலகச் சமூகங்கள் அஞ்சலி: பிரான்சின் ஈபிள் டவரில் விளக்குகள் அணைப்பு!

 • selphiGorilla

  கொரில்லாக்களையும் விட்டு வைக்காத செல்ஃபி மோகம் : குஷியான போஸ்கள்

 • QingdaoNavalParade

  சீனாவில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட கப்பல் அணிவகுப்பை ஒட்டி துறைமுகம் வந்தடையும் பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள்!

 • CaucaLandslide

  கொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி..: மீட்பு பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்