SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாண்டிபத்திரம் முத்துமாரியம்மன் கோயிலில் மதுஎடுப்பு விழா

2018-09-14@ 14:05:51

அறந்தாங்கி: ஆவுடையார்கோவில் அருகே பாண்டிபத்திரம் முத்துமாரியம்மன் கோயிலில் மதுஎடுப்புவிழா நடைபெற்றது. ஆவுடையார்கோவில் அருகே உள்ள பாண்டிபத்திரத்தில் பிரசித்திபெற்ற முத்துமாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும்  ஆவணிமாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த கோவில்   திருவிழா காப்புகட்டுதழுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலை, மாலை அம்மன் வீதியுலா நடைபெற்றது. பக்தர்கள் அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர். விழாவில் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்துவந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவில் முன் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையல் செய்து அம்மனை வழிபட்டனர். கடைசி நாளில் பெண்கள் முளைப்பாலி எடுத்து கோயிலை சுற்றி வந்து ஊரணியில் கரைத்தனர். திருவிழா ஏற்பாடுகளை பாண்டிபத்திரம் கிராமத்தினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nba

    டொராண்டோவில் நடந்த கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் அணிவகுப்பு

  • 18-06-2019

    18-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்