SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாந்தோணிமலை வெங்கட்ரமண சுவாமி கோயிலில் புரட்டாசி திருவிழா கொடியேற்றம்

2018-09-14@ 14:03:31

கரூர்: தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலின் புரட்டாசி பெருந்திருவிழாவினை முன்னிட்டு நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலின் புரட்டாசி பெருந்திருவிழா செப்டம்பர் 13ம்தேதி ஆரம்பித்து அக்டோபர் 13ம்தேதி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று கோயில் வளாகத்தில் துவாஜரோஹணம் எனப்படும் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

நேற்று காலை 10.30மணி முதல் 11மணி வரை இந்த கொடியேற்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கோயில் அர்ச்சர்கள் கலந்து கொண்டு விழாவுக்கான கொடியை ஏற்றினர். விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான திருத்தேரோட்ட நிகழ்வு செப்டம்பர் 21ம்தேதி அன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் கோயில் செயல் அலுவலர் சுரேஷ் உட்பட அனைத்து நிர்வாகிகளும், அர்ச்சகர்களும், பக்தர்களும் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sachinbday

    46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்

  • fingersgirl

    அமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி

  • 24-04-2019

    24-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • vote

    3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

  • hailstrom

    தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்