SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விநாயகர் சதுர்த்தி திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோயிலில் தேரோட்ட விழா

2018-09-14@ 14:02:59

கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் என்றழைக்கப்படும் சுவேத விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. முருகனின் நான்காவது படைவீடாக திகழும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலின் இணைகோயிலாக திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர்  கோயில் திகழ்கிறது. இக்கோயிலில் தனி சன்னதியில் வாணி  கமலாம்பிகை சமேத சுவேத விநாயகர் (வெள்ளை விநாயகர்) வீற்றிருக்கிறார். இக்கோயிலில் விநாயக சதுர்த்தி பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இவ்விழா கடந்த 5ம் தேதி   கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காலை, மாலை இருவேளையும் சுவாமி வீதிவுலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நாளான நேற்று   காலை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தேவேந்திரன் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து வாணி  கமலாம்பிகை சமேத  சுவேத விநாயகர் திருத்தேருக்கு வந்தனர். பின்னர் திருத்தேரோட்டம் சன்னதி வீதியில் தொடங்கி நான்கு வீதியிலும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.  தொடர்ந்து நேற்று மாலை மூஷிக வாகனத்தில் வீதியுலாவும், இன்று (14ம் தேதி) காலை அரசலாற்றில் தீர்த்தவாரியும்  நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2019

    22-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2019

    21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்