SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆரணி அடுத்த களம்பூர் ஆதிபராசக்தி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

2018-09-14@ 14:02:23

ஆரணி:  ஆரணி அடுத்த களம்பூர் ஆதிபராசக்தி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். ஆரணி அடுத்த களம்பூர் கிராமத்தில் பழமையான ஆதிபராசக்தி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலை புனரமைப்பு பணிகள் முடிந்த நிலையில் நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோபூஜை, யாகசாலை பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர், புனிதநீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பின்னர், பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்