SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்திற்கு திருக்குடைகள்

2018-09-14@ 14:01:09

ஆற்காடு: திருப்பதியில் நடைபெறும் பிரமோற்சவத்திற்கு ஆற்காட்டிலிருந்து திருமங்கை ஆழ்வார் பிரமோற்சவ பாதயாத்திரை குழுவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் திருக்குடைகளை பாதயாத்திரையாக கொண்டு சென்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் நேற்று தொடங்கி வரும் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆற்காட்டிலிருந்து ஆண்டுதோறும் பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று பிரமோற்சவத்தில் பங்கேற்று வருகின்றனர்.

அதேபோல், 31வது ஆண்டு பாதயாத்திரை செல்லும் நிகழ்ச்சி நேற்று வரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைக்கு பிறகு துவங்கியது. இந்த பாதயாத்திரையில் திருக்குடைகள் கொண்டு செல்லப்படுகிறது. பாதயாத்திரையை கலவை சச்சிதானந்த சுவாமிகள், சித்தஞ்சி மோகனானந்த சுவாமிகள் துவக்கி வைத்து அருளாசி வழங்கினர். திருக்குடைகளுடன் பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் வரும் 17ம் தேதி காலை திருமலையில் மலையப்ப சுவாமிக்கு திருக்குடைகளை சமர்ப்பணம் செய்கின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-10-2018

    17-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • raavana_2018

    டெல்லியில் தசராவுக்கு ராவண உருவ பொம்மைகள் தயாரிப்பு!

  • delhi_skywalkopns

    டெல்லியில் பிரமாண்டமான ஐடிஓ நடை மேம்பாலம் திறப்பு !

  • 6thday_tirupathifestiv

    நவராத்திரி பிரம்மோற்சவம் 6 ஆம் நாள் : அனுமந்த வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி

  • odisa_andhratitli

    ஆந்திரா, ஒடிசாவில் 'தித்லி' புயல் தாண்டவமாடிய பேரழிவு புகைப்பட காட்சிகள் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்