SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாரியம்மன் கோயில் ஆவணி திருவிழா : பெண்கள் மாவிளக்கு சுமந்து ஊர்வலம்

2018-09-14@ 13:59:38

கடத்தூர்: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே ராமியணஹள்ளி கிராமத்தில் மாரியம்மன் கோயில் ஆவணி திருவிழாவானது 60 ஆண்டுகளுக்கு பின் நடக்கிறது. இதனால் ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். இக்கோயிலில், கும்பாபிஷேக விழா முடிந்து 48 நாட்கள் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று கொட்டாபுலியனூர் மாரியம்மனுக்கு ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்தனர். கோயில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
 
ராமியணஹள்ளி மற்றும் குருமத்தூர் மாரியம்மனுக்கு செண்ட மேளம் முழங்க கேரளத்துபுலி . காளி நடனமாடியும் முக்கிய வீதி வழியாக மாவிளக்கு எடுத்து வரப்பட்டது. மாலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடத்தப்பட்டது. இதேபோல், கர்த்தானூரில் உள்ள வனத்துகாளியம்மனுக்கு  மாவிளக்கு எடுத்தும், பொங்கலிட்டும் பக்தர்கள் வழிபட்டனர். நாளை பக்தர்கள் அனைவரும் அவரவர் தோட்டங்களில் மாரியம்மனுக்கு மாவிளக்கு எடுத்து பொங்கலிட்டு படையல் வைக்க உள்ளனர். 16ம் தேதி அம்மனை வழியனுப்பும் விழா நடைபெறுகிறது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக ஆடு, கோழிகளை வெட்டி விருந்து வைத்தனர். இரவில, ஆரவள்ளிசூரவள்ளி கிராமிய தெரு கூத்து நாடகம் நடைபெற இருக்கிறது. விழா ஏற்பாடுகளை ராமியணஹள்ளி கோயில்
விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்