SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கருவாக்குறிச்சி சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

2018-09-14@ 13:59:01

மன்னார்குடி: மன்னார்குடி அருகில் கருவாக்குறிச்சி  கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் திரளான  பக்தர்கள் பங்கேற்றனர். மன்னார்குடிக்கு அடுத்து கருவாக்குறிச்சி கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர்  கோயில் மகா  கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. கோயில்களின் சீரமைப்பு பணிகள் கோயில் திருப்பணி கமிட்டி  மற்றும் கிராமவாசிகளால் கடந்த சில மாதங்களாக செய்யப்பட்டு நிறைவு செய்யப் பட்டது. அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 3 தினங்கள் கோயிலில்  யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. யாகசாலையில் புனித நீர் அடங்கிய கடம் வைத்து ஹோமம் வளர்க்கப் பட்டது. இதில் 81 கலச பூஜை, கஜபூஜை உள்ளிட்ட பல்வேறு விதமான பூஜைகள் செய்து அதன் நிறைவாக பூர்ணாஹூதி நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று முன்தினம் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பூனித நீர் கொண்ட கடங்களை ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் கோயிலை சுற்றி கருடன்  வானத்தில் வட்டமடிக்க  சிவாச்சாரியார் விமான கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து  தீபாராதனை காண்பிக்கப்பட்டது.. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப் பட்டது. பின்னர் சுவாமி களுக்கு புனித நீர் கொண்டு சித்தி விநாயகர் சிலைக்கு அபிசேகம் செய்தனர். அதனை தொடர்ந்து கோயிலில் அபிசேகம் தீபாராதனை செய்யப்பட்டது.

இதில் திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா, உலகத்தமிழர் பேரமைப்பு செயலாளர் குபேந்திரன், திமுக ஒன்றியக்குழு உறுப்பினர் முத்து ராமகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் கோவிந்தராஜ், தொழிலதிபர் அய்யாச்சாமி உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர். இதில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினர், கிராம கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.  ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்