SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குணசீலம் பெருமாள் கோயிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றம் : 21ம் தேதி தேரோட்டம்

2018-09-14@ 13:58:22

தா.பேட்டை: திருச்சி அருகே குணசீலத்தில்  பிரசன்ன வேங்கடாஜலபதி பெருமாள் கோயில் உள்ளது. மிக பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் பிரமோற்சவ விழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி கோயிலில் பகவத் பிரார்த்தனை, மிருத்சங்கரஹணம், அங்குரார்ப்பணம், வாஸ்துசாந்தி பூஜை நடந்தது. காலை 9 மணிக்கு கருட கொடி மண்டபத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.இரவு 7.30 மணிக்கு ஹம்ச வாகனத்திலும், இன்று காலை சாமி புறப்பாடும்,  இரவு 7.30க்கு சிம்ம வாகனத்திலும், 15ம் தேதி இரவு 7.30க்கு அனுமந்த  வாகனத்திலும் சாமி வீதியுலா வருகிறார்.

16ம் தேதி இரவு 7.30க்கு கருட  வாகனத்திலும், 17ம் தேதி இரவு 7.30க்கு சேஷவாகனத்திலும், 18ம் தேதி யானை  வாகனத்திலும் சாமி புறப்பாடு நடைபெறுகிறது. 16 முதல் 18ம் தேதி வரை மூலவர்  முத்தங்கி சேவையில் காலை 9 மணி முதல் சாமி பக்தர்களுக்கு  காட்சியளிக்கிறார். 19ம் தேதி மாலை 6.30க்கு பெருமாள்  உபயநாச்சியார்களுடன் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு  9.30க்கு புஷ்பவாகனத்திலும், 20ம் தேதி இரவு 7.30க்கு குதிரை வாகனத்திலும்  சாமி எழுந்தருள்கிறார். 20ம் தேதி காலை 7 மணிக்கு சாமி வெண்ணெய் தாழி  கிருஷ்ண அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். தேரோட்டம்  வரும் 21ம் தேதி காலை 8 மணியளவில் நடைபெறுகிறது. அன்று மாலை 5.30க்கு தீர்த்தவாரி  நடைபெறும். வரும் 23ம் தேதியுடன் பிரம்மோற்சவ விழா முடிவடைகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • germanybuilding

    ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

  • siriyaa

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

  • londonprotest

    பிரிட்டன் பிரதமருக்கு எதிராக மீண்டும் தலைதூக்கும் போராட்டம்: பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை எதிர்த்து மக்கள் பேரணி!

  • 25-03-2019

    25-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-03-2019

    24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்