SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்

2018-09-14@ 13:57:51

சேலம்: விநாயகர் சதுர்த்தியையொட்டி சேலம் உள்பட 4 மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். சேலம் ராஜகணபதி கோயிலில் விநாயகருக்கு தங்கக்கவசம் சாத்துப்படி நிகழ்ச்சி நடந்தது. ஆண்டுதோறும் அமாவாசை அடுத்த சதுர்த்தி அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அன்றையதினம் வீடுகளில் பிள்ளையார் சிலை வைத்து வழிபடுவார்கள். மேலும், பிள்ளையார் சிலைக்கு எருக்கம்பூ அணிவித்து, அருகம்புல், செவந்தி, மல்லிகை உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை வைத்து பூஜை செய்வது வழக்கம். அதன்படி நேற்று, நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

இதனால் பொதுமக்கள் அதிகாலை முதலே சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வாங்கி வீட்டில் வைத்து வழிபாடு நடத்தினர். அதேபோல், இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் அந்தந்த பகுதிகளில் 3 அடி முதல் 10 அடி வரை விநாயகர் சிலைகள் அமைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகளும் நடந்தது. பொதுமக்கள் விநாயகர் சதுர்த்திக்கு தேவையான பூ, பழங்கள், தேங்காய், மஞ்சள், வாழை, மா இலை, கொழுக்கட்டை, சுண்டல், பொரி, கடலை போன்றவற்றை வாங்கினர். இதனால், சேலத்தில் கடைவீதி, பால்மார்க்கெட், ஆனந்தா இறக்கம், வ.உ.சி. மார்க்கெட், உழவர் சந்தைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

சேலம் தேர்நிலையம் ராஜகணபதி கோயிலில் நேற்று காலை விநாயகருக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு ஹோமம், வெள்ளி, தங்கக்கவச சாத்துப்படி நடந்தது. மாவட்டம் முழுவதிலுமிருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ராஜகணபதியை வழிபட்டனர்.
சேலம் மாவட்ட பகுதியில் 1,058 விநாயகர் சிலைகளும், மாநகர பகுதியில் 778 சிலைகளும் என மொத்தம் 1,836 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 1000 சிலைகளும், தர்மபுரி மாவட்டத்தில் சுமார் 1000 சிலைகளும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 1500 சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவ்விழாவையொட்டி அந்தந்த போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-02-2019

    22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • perufloodrain

    பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • himachal

    இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

  • navamkolumpu

    கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

  • araliparaijallikattu

    அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்