SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2018-09-07@ 17:30:53

செப்டம்பர் 8, சனி   

மாத சிவராத்திரி. புகழ்த் துணையார், இளையான்குடி மாறனார், அதிபத்தர். திருச்செந்தூர் திருத்தேர். காட்டு மன்னார்குடி அடுத்த மோகூர் உரியடி. மதுரை நவநீதகிருஷ்ணஸ்வாமி  ராமாவதார திருக்கோலம். மாலை தவழ்ந்தகண்ணன் அலங்காரம். யானை வாகனத்தில் திருவீதியுலா.

செப்டம்பர் 9, ஞாயிறு  


ஸர்வ அமாவாசை. தர்ப்ப ஸங்கிரஹம். அழகர்கோயில் 6வது படைவீடு. அழகர்மலை வருஷாபிஷேகம். திருப்பனந்தாள் பொய்கைக் குளத்தில் ஸ்ரீபிரம்மனுக்கு சாபம் நீக்கி அருளிய லீலை. மதுரை நவநீத கிருஷ்ணர் ஆண்டாள் திருக்கோலம். திருக்கண்ணபுரம் செளரி ராஜப் பெருமாள் விபீஷணனுக்கு நடையழகு காண்பித்தல்.

செப்டம்பர் 10, திங்கள்  

மறைஞான சம்பந்தர். சாந்த்ரமான பாத்ரபத மாஸம் ஆரம்பம். திருவாரூர் மடப்புரம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் குருபூஜை.அஹோபிலமடம் 44ம் பட்டம் திருநக்ஷத்திரம். திருவல்லிக்கேணி பார்த்த சாரதிப் பெருமாள் கோயில் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. உப்பூர் ஸ்ரீவிநாயகப்பெருமான் காமதேனு வாகனத்தில் பவனி.

செப்டம்பர் 11, செவ்வாய்  

சந்திர தரிசனம். சாம உபாகர்மா. கல்கி ஜெயந்தி. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் குதிரை வாகனத்தில் திருவீதியுலா.

செப்டம்பர் 12, புதன்  

ஹரிதாளிகா கெளரி விரதம். விபத்தார கெளரி விரதம். திருவள்ளூர் வேதாந்ததேசிகர் உற்சவாரம்பம். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்  மாலை திருத்தேரில் திருவீதியுலா. மதுரை நவநீத கிருஷ்ணர் காலை ராஜாங்க அலங்காரம். இரவு புஷ்பக விமானத்தில் ராமாவதாரக் காட்சி.

செப்டம்பர் 13, வியாழன்  


விநாயகர் சதுர்த்தி. வேளூர் ஸ்ரீவினை தீர்த்த விநாயகர் உற்சவ பூர்த்தி. திருமலை, திருப்பதி, சென்னை பைராகி மடம் பிரம்மோற்சவாரம்பம். திருவலஞ்சுழி ஸ்ரீஸ்வேத விநாயகர் ரதோற்சவம். திருநெல்வேலி நெல்லையப்பர் சப்பரத்தில் மகாவிஷ்ணு திருக்கோல தரிசனம்.

செப்டம்பர் 14, வெள்ளி  


ரிஷி பஞ்சமி. மஹாலக்ஷ்மி விரதம். மதுராந்தகம் பாஷ்யகாரர் பஞ்ச சம்ஸ்கார உற்சவம். தல்லாகுளம் ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கிருஷ்ணாவதார திருக்கோலம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mo

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

  • 4l

    ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

  • to1

    குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்