SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெள்ளிக்கிழமை விடியும் வேளை...

2018-09-07@ 15:05:44

நாட்களின் தலைவனாகப் போற்றப்படுகிறது வெள்ளிக் கிழமை. முதல் மனிதன் படைக்கப்பட்டதும் வெள்ளிக் கிழமைதான், மறுமை தோன்றுவதும் வெள்ளிக்கிழமை தான் என்பன உட்பட இஸ்லாமிய வாழ்வியலில்  வெள்ளிக் கிழமையின் சிறப்புகள் குறித்து ஏராளமாய்ச் சொல்லப் பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை விடியும் வேளையிலேயே வானவர் கள் பள்ளிவாசலின் நுழைவாயிலில் வந்து அமர்ந்துகொள் வார்களாம்..! வெள்ளிக் கிழமை சிறப்புத் தொழுகைக்காக எந்த அடியார் முதலில் வருகிறார், யார் இரண்டாவதாக வருகிறார் என்று குறிப்பு எடுப்பார்களாம். வெள்ளிக் கிழமையன்று குளிக்கவேண்டும். இருப்பதில் சிறந்த ஆடையை அணியவேண்டும். நறுமணம் பூசிக் கொள்ளவேண்டும். பிறகு தொழுகைக்குச் செல்ல வேண்டும்.

பிறருக்குத் தொந்தரவு தராமல் அமைதியாக அமர்ந்திருந்து இமாம் நிகழ்த்தும் உரையைச் செவி தாழ்த்திக் கேட்க வேண்டும். இறைத்தூதர்(ஸல்) கூறினார்: “வெள்ளிக்கிழமையன்று பார் அங்கத் தூய்மையை முழுமையாகச் செய்து, பின்பு (ஜும்ஆ) தொழுவதற்காகப் பள்ளிவாசல் வந்து, இமாமின் உரையைச் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அவருக்கு அந்த வெள்ளியிலிருந்து அடுத்த வெள்ளி வரைக்கும் மேற்கொண்டு மூன்று நாள்களுக்கும் ஆக பத்து நாள்களில் ஏற்படுகின்ற சிறுசிறு பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.” “வெள்ளிக்கிழமையன்று ஒரு குறிப்பிட்ட நேரம் இருக்கிறது. அந்த நேரத்தில் யார் இறைவனைப் பிரார்த்திக் கிறாரோ அவர் கேட்டது கிடைக்கும்” என்றும் நபிகளார் கூறியிருக்கிறார்.

வெள்ளியன்று மற்ற அனைத்துப் பணிகளையும் சற்று ஒதுக்கிவைத்துவிட்டு சிறப்புத் தொழுகைக்கே முக்கியத் துவம் தரவேண்டும். ஏனெனில் தக்க காரணமின்றி வெள்ளித் தொழுகையைத் தவறவிடுபவர்களை இறைத் தூதர் கண்டித்துள்ளார். வேண்டுமென்றே தொழுகையைத் தவறவிட்டதற்குப் பரிகாரமும் செய்யவேண்டும். என்ன பரிகாரம் தெரியுமா? “தக்க காரணமின்றி வெள்ளித் தொழுகையை(ஜும்ஆ தொழுகை) தவறவிட்டவர் ஒரு தங்கக் காசு(தீனார்) தர்மம் செய்ய வேண்டும். அதற்கு முடியாவிட்டால் அரை தீனார் தர்மம் செய்யவேண்டும்” என்று நபிகளார் கூறியிருக் கிறார்.(ஆதாரம் அபூதாவூத், நபிமொழி எண்889) பரிகாரமாகத் தங்கத்தை தானமாக வழங்கவேண்டும் என்பதிலிருந்தே வெள்ளித் தொழுகையின் முக்கியத் துவத்தை நாம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த வார சிந்தனை

“இறைநம்பிக்கை கொண்டவர்களே, வெள்ளிக்கிழ மையன்று தொழுகைக்கு அழைக்கப்பட்டால்  இறை வனை நினைவுகூர்வதன் பக்கம் விரைந்து
செல்லுங்கள்.” (குர்ஆன் 62:9)

 சிராஜுல்ஹஸன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • PuyalGaja2

  புயல் தாக்கி ஆறு நாளாகியும் ஆறவில்லை ரணம்: டெல்டாவில் கஜா விட்டுச்சென்ற அழியாத சுவடுகள்!

 • EidEMIladunNabi

  மிலாது நபியை முன்னிட்டு உலகின் பல்வேறு நாடுகளில் வண்ண விளக்குகளால் மின்னிய இஸ்லாமிய கட்டிடங்கள்!

 • SidhaindaVazhkaiGaja

  கஜா புயல் காரணமாக சிதைந்த கிராமங்களில் முடங்கிய பொதுமக்களின் வாழ்க்கை..!

 • NabiBdaykabulBlast

  ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டுக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 50 பேர் பலி...பலர் படுகாயம்

 • TurkeyThanksGvingTrump

  வான்கோழியை மன்னித்தார் டிரம்ப்...: அமெரிக்காவில் தொடங்கியது தேங்க்ஸ்கிவிங் விழா!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்