காரைகுறிச்சி கிராமத்தில் மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
2018-09-07@ 14:23:20

தா.பழூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே காரைக்குறிச்சி கிராமத்தில் மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 50 வருடங்களுக்கு பிறகு நடத்தப்பட்டது. கோயில் வளாகத்தில் உள்ள சக்திவிநாயகர், வீரன் உள்ளிட்ட சுவாமிகளுக்கும் 25 அடி உயரம் கொண்ட புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட காளியம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு யாகசாலை கோ பூஜை பூர்ணாகுதி ஆகியவை கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தன. நேற்று காலை கும்பாபிஷேகம், அபிஷேகம் தீபாராதனை போன்றவை நடைபெற்றன. மதியம் அன்னதானமும் நடைபெற்றது. விழாவை காண சுற்றியுள்ள அருள்மொழி இருகையூர் வேணாநல்லூர் மதனத்தூர் வாழைகுறிச்சி சிந்தாமணி தா.பழூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் செய்திகள்
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் மாசி திருவிழா கொடியேற்றம் : பக்தர்கள் திரளாக பங்கேற்பு
வடுவூர் வடபாதி கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்
பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயிலில் ரதசப்தமியை முன்னிட்டு சுவாமி வீதி உலா
அண்ணாமலையார் கோயிலில் காவடி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
வேதபுரீஸ்வரர் கோயிலில் ரதசப்தமி பிரமோற்சவ தேரோட்டம் : திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
கும்பகோணம் சக்கரபாணி கோயிலில் 97 ஆண்டுகளுக்கு பிறகு சுழலும் சூரியபிரபையில் சுவாமி வீதியுலா
காஷ்மீரில் புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், ஜம்முவில் 5-வது நாளாக ஊரடங்கு உத்தரவு
சர்வதேச விமான கண்காட்சி: பெங்களூருவில் ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் விமான சாகச ஒத்திகை
லக்னோவில் நடைபெற்ற வருடாந்திர காய்கறி, பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்
ஃபிரான்சின் நீஸ் திருவிழா : உலகத் தலைவர்களின் உருவங்கள் இடம்பெற்ற பிரம்மாண்ட ஊர்வலத்தின் புகைப்பட தொகுப்பு
19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்