தர்மபுரி அருகே சக்தி மாரியம்மன் கோயில் திருவிழா
2018-09-06@ 14:56:40

தர்மபுரி: தர்மபுரி அருகே மாதேமங்கலத்தில் சக்தி மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். தர்மபுரி அருகே மாதேமங்கலம் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 4ம் தேதி காலை 6 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. காலை 7 மணிக்கு கங்கை பூஜை சக்தி அழைப்பு கங்கணம் கட்டுதல் நடந்தது. மாலை 3 மணிக்கு அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 10 மணிக்கு, தாரை தப்பட்டை மேளதாளங்கள் முழங்க மா விளக்கு ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் மா விளக்கு எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை 7 மணிக்கு நடன நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இன்று காலை வாணவேடிக்கையும், அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது.
மேலும் செய்திகள்
நன்மைகள் அருளும் நரசிம்ம சாஸ்தா
சிறப்பு மிக்க ஆலயங்கள்!
குரு பெயர்ச்சி பரிகாரக் கோயில்கள்
நல்வாழ்வு அருளும் அம்மன் கோயில்கள்
சிவபெருமானின் கதையை விளக்கும் வகையில் கைலாசநாதர் தலையில் மண்சட்டி சுமந்து வீதியுலா
கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் கோயிலில் ஆவணி தபசுகாட்சி திருவிழா கோலாகலம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா
ரிசாட்-2பிஆர்1 உள்ளிட்ட 10 செயற்கைகோள்கள் பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.
சுவீடனில் இந்திய பாரம்பரிய உடை அணிந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார பேராசிரியர்கள் !!
நஞ்சைக் கக்கும் பாம்பிடமிருந்து உயிரைக் காக்கும் மருந்து தயாரிக்கும் பிரேசில் ஆய்வாளர்கள்