SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏகாம்பரேஸ்வரர் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தல வரலாறு

2018-09-06@ 09:38:54

முன்காலத்தில் இத்தலமானது கடம்ப மரங்கள் நிறைந்த அடர்ந்த கடம்பவனமாக இருந்துள்ளது. உறையூரை தலைநகரமாகக் கொண்டு சோழமன்னன் ஆட்சி செய்தபோது, வணிகன் ஒருவன் உறையூரிலிருந்து வணிக நிமித்தமாக வடக்கு நோக்கி பயணத்தை தொடங்கினான். அவ்வணிகன் இக்கடம்பவனத்தை வந்தடைந்த போது மாலைப்பொழுதாகி பின் இருள் சூழ்ந்து விட்டதால் மேற்கொண்டு பயணம் மேற்கொள்ள இயலாமல், இக்கடம்ப வனத்திலேயே தங்க தீர்மானித்து, அங்கிருந்த ஆலமரத்தின் மீது ஏறி அமர்ந்து சாய்ந்திருந்தான். இக்கடம்பவனத்தில், நள்ளிரவில் திடீரென்று அவன் கண்ணெதிரில் ஓர் ஒளி மிகுந்த, தீப்பிழம்பின் நடுவே ஓர் சிவலிங்கம் தோன்றி, தேவர்களும், முனிவர்களும் வழிபடுகின்ற காட்சி பளிச்சென்று தோன்றி மறைந்தது.

இந்த அற்புத காட்சியை கண்ட வணிகன் சோழமன்னரிடம் சொல்ல உறையூரை நோக்கி திரும்பச் சென்றான். உறையூர் நகரையடைந்ததும் வணிகன், அரண்மனைக்குச் சென்று மாமன்னன் பராந்தக சோழனிடம் முதல் நாள் இரவில் இக்கடம்ப வனத்தில் தான் கண்ட அற்புதக் காட்சியை எடுத்துரைத்தான். சோழனின் அரண்மனையில் விருந்தினராய் தங்கியிருந்த குலசேகர பாண்டியனும், இதைக் கேள்வியுற்று, பாண்டியனும், சோழனும் வணிகனுடன் தன்பரிவாரங்களையும் அழைத்துக் கொண்டு இக்கடம்ப வனத்தை வந்தடைந்து சிவலிங்கத்தை தேடி அலைந்தனர். அப்போது கையில் செங்கரும்பு ஒன்றினை ஊன்றிக்கொண்டு முதியவர் ஒருவர் தடுமாறி மன்னர்களை அணுகி சிவலிங்க இருப்பிடத்தைக் காட்டி திடீரென்று ஜோதி வடிவமாக மறைந்தார்.

அந்த ஜோதி மறைந்த கிழக்கு திசை நோக்கி மன்னர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தபோது, தூரத்தே ஒரு குன்றின் மீது முருகப்பெருமான் தண்டாயுதபாணியாகக் காட்சி தந்தார். பக்தி பரவசத்தில் ஆழ்ந்த சோழனும், பாண்டியனும், ஏகஜோதியின் இடையில் தோன்றிய ஏகாம்பரேஸ்வரருக்கு ஓர் ஆலயமும், கிழக்கு குன்றின் மீது தோன்றிய தண்டாயுதபாணி சுவாமிக்கு அம்மலையின் மீது ஓர் ஆலயமும் ஏககாலத்தில் கட்டுவதென தீர்மானித்து குலசேகர பாண்டியனால் இரு ஆலயங்களும் கட்டப்பட்டது. கண்ணகி இத்தலத்தின் வழியாக வந்தபோது, முருகப்பெருமான் கண்ணகியின் கடுஞ்சினத்தை தணித்து, சிறுவாச்சூர் எனும் இடம் சென்று மதுரகாளியாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க ஆற்றுப்படுத்தினார் என்றும் முன்னோர் வாக்காக அமைந்துள்ளது. திருவிழாக்களாக ஆடிப்பூரம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி விழா, கந்தசஷ்டி, தீபாவளி, திருக்கார்த்திகை, தனூர் மாதம், திருவாதிரை, சிவராத்திரி, சித்ராபவுர்ணமி, வைகாசி விசாகம், ஆண்டு உற்சவமாக தைப்பூசம், பங்குனி உத்திரம் நடக்கிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

  • nigeriaaa_twins1

    இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • russia_anumin111

    ரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்

  • largestpotato

    உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்

  • marsgobi_desert1

    செவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்