SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சக்தி மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு கூழ் ஊற்றும் விழா

2018-09-05@ 15:01:05

தர்மபுரி: சவுளுப்பட்டி ஸ்ரீ சக்தி முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நடந்தது. தர்மபுரி ஒட்டப்பட்டி அருகே சவுளுப்பட்டி ஸ்ரீ சக்தி முத்து மாரியம்மன், பழைய ஊர் மாரியம்மன், மகா மாரியம்மன், பட்டாளம்மன் கோயில் திருவிழா கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. நேற்று காலை 8.30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. பகல் 2 மணிக்கு வாணவேடிக்கை, கரகாட்டம், நையாண்டி மேளவாத்தியங்களுடன் ஊர்வலம் நடந்தது.

மாலை 5 மணிக்கு பழைய ஊர் மாரியம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நடந்தது. இதில் ஏராயமான பெண்கள் கூழ் பானைகளுடன் சென்று கோயில் முன் கூழ் ஊற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தொடர்ந்து அம்மனை வழிபட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. இரவு 7 மணிக்கு நடன கலை நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-06-2019

    18-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்