SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேதாரண்யம் தாலுகா அண்டர்காடு திரவுபதையம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

2018-09-05@ 15:00:07

வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகா, அண்டர்காட்டில் அமைந்துள்ளது திரவுபதையம்மன் கோயில். இக்கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் தீமிதி திருவிழா இந்த ஆண்டு கடந்த மாதம் 15ம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாள்தோறும் அம்மன் வீதியுலா காட்சியும் சிறப்பு தீபாரதனைகளும் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான அரவோன் களப்பலி நிகழ்ச்சி கடந்த மாதம் 31ம் தேதி நடைபெற்றது. கடைசி நாள் திருவிழாவான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது.

இதில் அம்மனுக்கு மாலை அணிந்து விரதமிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திகடன் செலுத்தினர். பின்பு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடைபெற்று சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. பின்பு பக்தர்களுக்கு அன்னதானமும் வானவேடிக்கையும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராமவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஎஸ்பிசச்சிதானந்தம், இன்ஸ்பெக்டர் முருகவேல் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • PuyalGaja2

    புயல் தாக்கி ஆறு நாளாகியும் ஆறவில்லை ரணம்: டெல்டாவில் கஜா விட்டுச்சென்ற அழியாத சுவடுகள்!

  • EidEMIladunNabi

    மிலாது நபியை முன்னிட்டு உலகின் பல்வேறு நாடுகளில் வண்ண விளக்குகளால் மின்னிய இஸ்லாமிய கட்டிடங்கள்!

  • SidhaindaVazhkaiGaja

    கஜா புயல் காரணமாக சிதைந்த கிராமங்களில் முடங்கிய பொதுமக்களின் வாழ்க்கை..!

  • NabiBdaykabulBlast

    ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டுக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 50 பேர் பலி...பலர் படுகாயம்

  • TurkeyThanksGvingTrump

    வான்கோழியை மன்னித்தார் டிரம்ப்...: அமெரிக்காவில் தொடங்கியது தேங்க்ஸ்கிவிங் விழா!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்