SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாப்பக்காபட்டியில் பெரும் பூஜை விழா : அய்யர்மலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு

2018-09-05@ 14:58:15

குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த பாப்பக்காப்பட்டி கிராமம் வாத்திகவுண்டனூர் கட்டையன் கூட்டத்து பங்காளிகள் சார்பில் 18 ஆண்டுகளுக்கு பிறகு அய்யர்மலை கருப்பண்ணசாமி வைரபெருமாள், பரமசிவம் பார்வதி, கட்டையன் கருப்பு, பட்டவன் சுவாமிக்கும் வாத்திக் கவுண்டனூர் மதுரைவீரன் சுவாமிக்கும் குலதெய்வங்களின் பெரும் பூஜை விழா  நடைபெற்று வருகிறது. இவ்விழாவினையொட்டி கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி வாத்திகவுண்டனூரில் காகம் குறி அறிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை சுத்த தண்ணீர் தெளித்து வாத்திகவுண்டனூரில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பொங்கல் பானை எடுத்து அய்யர்மலை சென்று கிடாவெட்டி பூஜை செய்தனர்.

இன்று(புதன்கிழமை) காலை கோயில் வீட்டில் இருந்து சரவணபுரம் சென்று பரமசிவன் பார்வதிக்கு பொங்கலிட்டு சுத்த பூஜை நடைபெறுகிறது. நாளை(வியாழன்) பட்டவன் குறி எடுத்து சரவணபுரம் சென்று அங்குள்ள பட்டவன் நிலைக்கு பூஜை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து மாலை கோயில் வீட்டில் இருந்து புறப்பட்டு சரவணபுரம் சென்று இரவு 12 மணிக்கு கட்டையன் கருப்ப சுவாமிக்கு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

வெள்ளிகிழமை மதுரைவீரன் சுவாமிக்கு பங்காளிகள் அனைவரும் பொங்கல் வைத்து கிடாவெட்டி பூஜை மற்றும் காது குத்துதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு கோயில் முன்பு பொதுபொங்கல் நடைபெற்று படையல் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்று விழா முடிவடைகிறது. இவ்விழா பல ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுவதால் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாட்டினை டாக்டர் பார்த்திபன், முன்னாள் ஊராட்சி தலைவர் இளங்குமரன் ஆகியோர் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-06-2019

    18-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்