SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா துவக்கம்

2018-09-05@ 14:57:33

திருப்புத்துர்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. வரும் 12ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பெருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். வரும் 13ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.இதையொட்டி நேற்று காலை சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் ஓத, கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு விநாயகர் சதுர்த்தி பெருவிழா கோலாகலமாக துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மூலவர், அங்குசத்தேவருக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர் எழுந்தருளி வீதியுலா வந்தார்.

விழாவை முன்னிட்டு தினமும் சுவாமி வெள்ளி கேடயம், பூத வாகனம், கமல வாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 12ம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை உற்சவர் திருத்தேருக்கு எழுந்தருளலும், மாலை 4 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகிறது. வருடம் ஒருமுறை மட்டும் நடைபெறும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். செப். 13ம் தேதி காலை கோயில் குளத்தில் விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி உற்சவம், உச்சிகால பூஜையில் மூலவருக்கு ராட்சத கொழுக்கட்டையும் படைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர்கள் கோனாப்பட்டு அருணாச்சலம், அரிமளம் என்.சிதம்பரம் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • BiharProtestBrainFever

    பீகாரில் மூளைக்காய்ச்சல் காரணமாக தொடரும் குழந்தைகளின் உயிர்பலி: அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்- புகைப்படங்கள்

  • YamagataEarthQuake18

    வடமேற்கு ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்..: ரிக்டர் அளவுக்கோலில் 6.8 ஆக பதிவானதால் மக்கள் பீதி!

  • RaptorsShootingToronto

    கனடாவில் லட்சக்கணக்கானோர் கூடியிருந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் திடீரென நடைபெற்ற துப்பாக்கிச்சூடு..: 4 பேர் காயம்!

  • 19-06-2019

    19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்