SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வரகூர் வேங்கடேசபெருமாள் கோயிலில் உறியடி திருவிழா

2018-09-05@ 14:56:54

திருக்காட்டுப்பள்ளி:திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள வரகூர் வேங்கடேச பெருமாள் கோயிலில் உறியடி திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான  பக்தர்கள் பங்கேற்றனர். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள வரகூர் வேங்கடேசபெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஆண்டுதோறும் 12 நாட்கள் உறியடி திருவிழா நடைபெறும். இந்தாண்டு விழா கடந்த 27ம் தேதி துவங்கியது. விழாவின் சிறப்பு அம்சமாக உறியடி திருநாளான நேற்று முன்தினம் காலை வேங்கடேசபெருமாள், வெண்ணைத்தாழி அலங்காரத்தில் பல்லக்கில் புறப்பட்டு வீதியுலாவாக வந்து கடுங்கால் நதிக்கரையில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். மாலையில் ருத்ர ஜபத்துடன் திருமஞ்சனம் நடந்தது. இது வேறு எந்த ஒரு பெருமாள் கோயில்களிலும் காண முடியாத நிகழ்ச்சியாகும்.

இரவு 12.30 மணிக்கு வெள்ளி கேடயத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வேங்கடேசபெருமாள் புறப்பாடு துவங்கியது. சுவாமியை 126 பக்தர்கள் அங்கபிரதட்சனம் செய்து பின் தொடர்ந்தனர். இடையர்கள், சப்பாணிகள் போல் வேடமணிந்து பக்தர்கள் தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றினர். இதைதொடர்ந்து உறியடி திருவிழா துவங்கி நேற்று அதிகாலை வரை நடந்தது. இதில் பக்தர் சூரி (எ) அரவிந்த் வெற்றி பெற்றார்.

இதைதொடர்ந்து வழுக்குமரம் ஏறுதல் போட்டி நடந்தது. விக்னேஷ் என்பவர் 27 அடி உயரமுள்ள வழுக்கு மரத்தில் ஏறி பிரசாதங்களை எடுத்து பக்தர்களுக்கு வழங்கினார். பின்னர் சுவாமிக்கு திருவந்திகாப்பு, கோணங்கி உரையாடல் ஏகாந்த சேவை, தீபாராதனை நடந்தது. இதைதொடர்ந்து நேற்று காலை ருக்மணி கல்யாணம் நடந்தது. கோயில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் சந்திரசேகரன், அறங்காவலர்கள் பத்மநாபன், நாராயணன், ஜெகந்நாதன், ஜெயேந்திரன் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்