SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஆண்டாள் கோயிலில் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி

2018-09-05@ 14:56:04

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் முன்பு, கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் முன்பு, கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி  நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் நடைபெற்றது. முன்னதாக ஆண்டாள் கோயிலில் இருந்து ஆண்டாள், ரெங்கமன்னார், பெரியபெருமாள் சன்னதியிலிருந்து பெரியபெருமாள் மற்றும் கண்ணன் சுவாமிகள், சர்வ அலங்காரத்துடன் மேள, தாளம் முழங்க கோயிலிலிருந்து அழைத்து வரப்பட்டனர்.

பின்னர் மாட வீதிகள் மற்றும் ரத வீதிகளில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். முக்கிய சந்திப்புகளில் உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதி நிகழ்ச்சியாக ஆண்டாள், ரெங்கமன்னார், பெரியபெருமாள், ஆலிலைக்கண்ணன் முன்பாக வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி கோயில் முன்பு நடந்தது. தேர்வான இளைஞர்கள் வழுக்கு மரத்தில் ஏறி, மேற்புறத்தில் கட்டியிருந்த பரிசுப்பொருளை எடுத்தனர். ஸ்ரீஜெயந்தி புராணத்தை வேதபிரான் பட்டர் வாசித்தார். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோ செய்திருந்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

  • fra

    பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்