SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்செந்தூர் கோயில் ஆவணித்திருவிழாவில் சுவாமிஅம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை

2018-09-04@ 15:09:24

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் ஆவணித்திருவிழாவில் 5ம் திருநாளான நேற்று சுவாமி, அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆவணித்திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினமும் காலை, மாலையில் சுவாமியும், அம்மனும் பல்வேறு வானங்களில் திருவீதி உலா வரும் வைபவம் நடந்தது. நேற்று 5ம் திருவிழாவில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் பல்வேறு வகை அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிவகொழுந்தீஸ்வரர் கோயிலில் இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நடந்தது.

பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமானும், வள்ளிஅம்பாளும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வந்து சிவன் கோயிலை சேர்ந்தடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 7ம் திருவிழாவான  நாளை (5ம் தேதி) காலை 5.30 மணிக்கு சுவாமி சண்முகப்பெருமான் உருகு சட்டசேவை நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு சுவாமி வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பிள்ளையன் கட்டளை மண்டகப்படிக்கு சேருகிறார். அங்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனையானதும் 4.30 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வருகிறார். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்