SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கீழக்கரை அருகே கிருஷ்ண ஜெயந்தியில் உறியடி உற்சவம்

2018-09-04@ 15:08:49

கீழக்கரை: கொம்பூதி கண்ணபிரான் கோவிலில் 35ம் ஆண்டு கிருஷ்ணஜெயந்தி விழா நடைபெற்றது. கீழக்கரை அருகே கொம்பூதி கண்ணபிரான் கோவிலில் 35ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் சுதர்ஸன ஹோமம் நடந்தது. காலை 11 மணியளவில் விநாயகர் கோவிலில் இருந்து 108 பால்குடம் ஏந்திய பக்தர்கள் வீதி உலா வந்தனர். இதைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதணைக்கு பிறகு வெள்ளி கவச அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து தொடக்க பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
தொடர்ச்சியாக நேற்று காலை மஞ்சள் நீராட்டு விழா, 11 மணியளவில் கயிறு இழுக்கும் போட்டி, 12 மணியளவில் 20 அடி உயரமுள்ள வழுக்கு மரத்தில் ஏறும் போட்டி, உறியடி உற்சவம் நடந்தது. ஆயிரக்கணக்கானவர்களுக்கு அன்னதானம், தொடர்ந்து மாலையில் தேரோட்டம் நடைபெற்றது.

முதுகுளத்தூர் மற்றும் கடலாடி பகுதியில் கடந்த சனிக்கிழமை காப்பு கட்டுதலுடன் கிருஷ்ண ஜெயந்தி விழா துவங்கி, நேற்றுடன் நிறைவடைந்தது. கடலாடி அருகே உள்ள மீனங்குடி, கருங்குளம், கரிசல்குளம், பெரியகுளம், கண்ணன்புதுவன்,சாயல்குடி அருகே உள்ள திட்டங்குளம், வேடகரிசல்குளம், உசிலங்குளம், முதுகுளத்தூர் அருகே உள்ள செல்வநாயகபுரம், உடைகுளம், புளியங்குடி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. கண்ணன் கோயில்களில் பொங்கல் வைத்தல், உற்சவ மூர்த்தி கிராமத்தை வலம் வருதல், உரியடித்தல், வழுக்கு மரம் ஏறுதல், மஞ்சள் தண்ணீர் ஊற்றுதல், விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், திருவிளக்கு பூஜை,  போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

  • nigeriaaa_twins1

    இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • russia_anumin111

    ரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்

  • largestpotato

    உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்

  • marsgobi_desert1

    செவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்