SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவர் கோயிலில் பக்தர்கள் வழிபாடு

2018-09-04@ 14:54:13

தர்மபுரி:தேய்பிறை அஷ்டமியையொட்டி, அதியமான்கோட்டை காலபைவரர் கோயிலில் பக்தர்கள் நேற்று சிறப்பு வழிபாடு நடத்தினர். சுவாமி தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் தட்சணகாசி காலபைரவர் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் வரும் அஷ்டமி நாளில் பக்தர்கள் ஏராளமானோர் திரளுவர். பூசணியில் விளக்கேற்றி பைரவர் வழிபாட்டை மேற்கொள்வர். தர்மபுரி மட்டுமின்றி, சேலம், கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் திரளான மக்கள் சுவாமியை தரிசிக்க வந்து செல்வர். நேற்று, ஆவணி மாத தேய்பிறை அஷ்ட விழாவையொட்டி காலை 7 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.

8 மணிக்கு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன. காலை 9 மணிக்கு தங்க கவசத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமியை தரிசனம் செய்தனர். மேலும், பூசணி விளக்கு ஏற்றியும், மிளகாய் வழங்கியும் வழிபட்டனர். பக்தர்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது. அதியமான்கோட்டை காலபைரவர் கோயிலில் மாதந்தோறும் நடக்கும் தேய்பிறை அஷ்டமிக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் கோயில் ஊழியர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று நடந்த அஷ்டமி பெருவிழாவில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பக்தர்களை கட்டுப்படுத்தவும் ஊழியர்களுக்கு வாக்கி டாக்கியை கோயில் நிர்வாகம் வழங்கியது. இதன் மூலம் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எந்த சிரமமும் இன்றி நீண்ட நேரம் காத்திருக்காமல் இலகுவாக சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் வரிசையில் நிற்கும் போது சாமியை தரிசிக்கும் வகையில் இரு இடங்களில் எல்இடி டிவி வைக்கப்பட்டு அதன் மூலம் காலபைரவர் தெரியும் வகையில் காண்பிக்கப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

  • singaporeasianmodi

    சிங்கப்பூரில் 13வது கிழக்காசிய உச்சி மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்பு!

  • crowd_thiruchendhuru11

    சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் : சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்