SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உண்ணாமலைக்கடை கீழத்தெரு இசக்கி அம்மன் கோயில் கொடை விழா

2018-09-04@ 14:53:38

மார்த்தாண்டம்: உண்ணாமலைக்கடை கீழத்தெரு ஆற்றுக்கடவு இசக்கி  அம்மன் கோயிலில் 75வது கொடை விழா இன்று (செவ்வாய்கிழமை) நடக்கிறது.
உண்ணாமலைக்கடை பட்டாரியர் சமுதாய நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஆற்றுக்கடவு இசக்கி  அம்மன் கோயில் விழா காலை கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. சுசீந்திரம் சச்சிதானந்தம் போற்றி தலைமையில் ஹோமம் நடைபெறுகிறது. 7.30 மணிக்கு கும்பம் நிறைத்தல் நிகழ்ச்சியும், தொடர்ந்து குமரேசன் குழுவினரின் நையாண்டி மேளமும் நடக்கிறது. 8 மணிக்கு தீபாராதனையை தொடர்ந்து ஆற்றில் கும்பம் எடுத்து கீழத்தெரு ஒடுக்குபுரையில் ஒரு கும்பம் இறக்கப்படுகிறது. தொடர்ந்து கும்ப ஊர்வலமானது பின்னந்தோட்டம் திருப்பு, செக்குமூடு மெயின் ரோடு, அரசமூடு, பூதம்மன் கோயில், செட்டிமார்கோணம், ஆசாரிமார்தெரு, மேலத்தெரு, பூமூடு,  நடுத்தெரு, காட்டுவிளை, வழியாக கோயில் சன்னதியை வந்தடைகிறது.

11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு  அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து 12 மணிக்கு உச்சகால பூஜை, 12.30க்கு கீழ்த்தெரு பராசக்தி மண்டபத்தில் அன்னதானம் நடக்கிறது. மாலை 5 மணிக்கு பத்ரகாளி கோயில் வளாகத்தில் நையாண்டி மேளம், 6 மணிக்கு தீபாராதனை, 6.15க்கு உருவ வழிபாட்டு பூஜை, பாலகிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. தொடர்ந்து 7 மணிக்கு திருவிளக்கு ஊர்வலம், பக்தி இன்னிசை நடக்கிறது. இரவு 9 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சி, 12.30க்கு ஒடுக்கு பூஜை, நள்ளிரவு 2 மணிக்கு அம்மனுக்கு பூ படைப்பு, தீபாராதனை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாக குழு தலைவர் மாணிக்கவாசகம், செயலாளர் வேல்முருகன், துணைத் தலைவர் கிருஷ்ணன், துணைச் செயலாளர் வேல்முருகன், பொருளாளர் முரளி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்துள்ளனர். வரும் 11ம் தேதி செவ்வாய்  காலை 10 மணிக்கு 8ம் கொடை நடக்கிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-08-2019

    20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • wphotoday

    உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

  • carshowchennai

    சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

  • hongkongrally

    ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

  • 19-08-2019

    19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்