SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதனகோபால சுவாமி கோயிலில் வழுக்கு மரம் ஏறும் திருவிழா

2018-09-04@ 14:52:16

பெரம்பலூர்: பெரம்பலூர் மரகதவள்ளி தாயார் சமேத மதனகோபால சுவாமி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நான்கு மாட வீதிகளில் உரியடி திருவிழா மற்றும் வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிருஷ்ண ஜெயந்தி விழா நாடெங்கும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து, 2 நாட்களாக பல்வேறு கிராமங்களில் உரியடி திருவிழா மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனையொட்டி பெரம்பலூர் மரகதவள்ளித் தாயார் சமேத மதனகோபால சுவாமி கோயிலில் நேற்று மாலை நான்குமாட வீதிகளில் உரியடி திருவிழா மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கான சிறப்பு பூஜைகளை கோயில் குருக்களான பட்டாபி பட்டாச்சாரியார், உதவி குருக்கள் சக்கர வர்த்தி பட்டாச்சாரியார் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர். இதில் உரியடி திருவிழா நடந்தபோது அலங்கார தோற்றத்தில் மதன கோபாலசுவாமி வெளியே வந்து உரியடி நிகழ்ச்சியை நேரில் கண்டு களித்தார். வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சியில் உள்ளூர் இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். விழாவில் கோயில் நிர்வாக அலுவலர் யுவராஜுலு, முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், பூக்கடை சரவணன், கீத்துக்கடை குமார் காய்கறிகடை கோபால் சரவணன் உள்ளிட்டோர் மற்றும் பெரம்பலூர், துறைமங்கலம், அரணாரை, எளம்பலூர், விளாமுத்தூர் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்