கோதண்டராமர் சுவாமி கோயிலில் தங்க கவசத்தில் கிருஷ்ணர் சேவை : திரளான பக்தர்கள் தரிசனம்
2018-09-04@ 14:51:24

அரியலூர்: அரியலூர் கோதண்டராமசாமி திருக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. திருமாலின் பத்து அவதாரங்களையும் ஒருசேர கண்டாலே அவரது சாபம் நீங்கும் என்பதால் இத்திருத்தலத்தில் தசாவதார மண்டப தூண்களில் தசாவதார காட்சிகள் தத்ரூபமாக உள்ளன. ஆறாம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள் அமைந்துள்ளது சிறப்புக்குரியதாகும். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோதண்டராமசாமி கோயிலில் கிருஷ்ணர் சன்னதியில் உள்ள மூவருக்கும் தசாவதாரங்களில் ஒன்றான கிருஷ்ண அவதாரத்திற்கும் பால் தயிர் மஞ்சள் இளநீர் தேன் திரவிய பொடி மற்றும் பல்வேறு அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
கிருஷ்ணருக்கு கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரமும் தீபாராதனையும் நடைபெற்றது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கிருஷ்ணரை தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியை அரியலூர் பெரியசாமி மற்றும் அறிவழகன் சிறப்பு ஏற்பாடுகளை செய்து விழாவிற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கம் அவுள் பாயாசம், புளிசாதம் மற்றும் சுண்டல் பிரசாதமாக வழங்கப்பட்டன. இவ்விழாவி சுமார் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் செய்திகள்
திருச்செந்தூர் மாசித்திருவிழா : சுவாமி, அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி பூஜை
திருச்செந்தூர் மாசித் திருவிழா : சுவாமி அம்பாள் வாகனத்தில் வீதியுலா
நன்செய் இடையாறு ராஜா சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா
பிரம்மபுரீஸ்வரர் கோயில் தேரோட்ட விழா : அன்ன, சிம்ம வாகனத்தில் சுவாமி திருவீதியுலா
சாட்டுப்புதூர் சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்
பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு
முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு
டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி