அக்னி திசை நோக்கி அமர்ந்திருக்கும் சேலம் கோட்டை மாரியம்மன்
2018-09-04@ 09:45:56

சூரிய சந்திர கிரகணங்களில் கோயில்கள் பூட்டப்படுவது வழக்கம். ஆனால், கோட்டை மாரியம்மன் ஆலயம் பூட்டப்படாது. சூரிய சந்திர கிரகண கதிர்களால் வரும் பாதிப்பிலிருந்து காக்கிறாள் என்றும் சொல்கிறார்கள். ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம். அக்னி திசை நோக்கி அமர்ந்திருக்கிறாள். வலது காலை ஊன்றி, இடது காலை மடக்கி வீராசனத்தில் வீற்றிருக்கிறாள். பெரிய மாரியம்மனின் கண்களும், பலி பீடத்திலுள்ள அம்மனின் கண்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது சிறப்பாகும்.
பக்தர்கள் வீட்டில் அம்மை வார்த்திருக்கும் நேரத்தில் அம்மையின் வெம்மையை குறைக்க பலி பீடத்தில் வேப்பிலை கலந்த நீரை ஊற்றி அம்மனை குளிர வைப்பார்கள். உப்பு, பருப்பு, மிளகு, வெங்காயம் போன்றவற்றை பிரார்த்தனை பொருட்களாக செலுத்துகின்றனர். கண்வலி, நெஞ்சுவலி போன்ற உபாதைகள் தீர கண் மலர், மண் உரு, கை, கால், முகம் போன்ற பிரதிமைகளை பிரார்த்தனை பொருட்களாக செலுத்துகின்றனர். சேலம் மாநகரின் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகிலும், ரயில் நிலையத்திலிருந்து ஐந்து மைல் தொலைவிலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
மேலும் செய்திகள்
மகத்துவமிக்க குடந்தை மாசி மகம்
துன்பம் போக்கி நன்மையருளும் விநாயகர்
தீராத நோயையும் தீர்ப்பார் தோரணமலை முருகன்
அம்மைநோய் குணமாக்கும் ஊத்துக்காட்டு மாரியம்மன்
அற்புதங்கள் நிகழ்த்தும் சாய்பாபா எப்போதும் உன்னுடன் இருக்கிறார்
ராகு பகவான் கடகத்தில் இருந்து மிதுனத்திற்கு இடம் பெயர்ந்தார்
டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது
காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்
பாகிஸ்தானில் சவுதி இளவரசர் சுற்றுப்பயணம் : நாட்டின் மிக உயரிய ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ விருது இளவரசருக்கு அளிக்கப்பட்டது
காஷ்மீரில் புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், ஜம்முவில் 5-வது நாளாக ஊரடங்கு உத்தரவு