SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெம்ரம்பலூர் காளிங்கராயநல்லூர் பச்சையம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

2018-09-03@ 14:38:31

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே காளிங்கராயநல்லூர் பச்சையம்மன் கோயிலில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, அகரம் சீகூரை அடுத்துள்ள காளிங்கராயநல்லூர் கிராமத்தில் சேலம், தர்மபுரி, திருச்சி, கடலூர், புதுச்சேரி பகுதிகளில் வாழும் வன்னியர், யாதவர், கவுண்டர் உட்பட பல்வேறு ஜாதி மக்களின் குலதெய்வமாக விளங்கும் பச்சையம்மன், மண்ணாத சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் பக்தர்கள் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் திருவிழாவாக கொண்டாடுவது வழக்கம்.

இவ்விழாவையொட்டி காலை 9 மணிக்கு வலஞ்சுழி விநாயகர், மன்னாத சுவாமி,பச்சையம்மன் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. மாலை 3 மணிக்கு சின்னாற்றங்கரையில் சக்தி அழைத்தலும், சக்தி கரகம், அக்னி கரகத்துடன் வெடி, மேளதாளங்களுடன் பச்சையம்மன் சன்னதிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சிறப்பு வழிபாடு ஆராதனை நடந்தது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து பச்சையம்மனை குலதெய்வமாக வழிபடும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குழுமி வழிபட்டனர்.

தொடர்ந்து கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீமிதி வளாகத்தில் பச்சையம்மன், மண்ணாதி சுவாமிகள் மலர் அலங்கா ரத்துடன் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. பின் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தீமிதி களத்தில் திருஷ்டி கழிக்கப்பட்டு, தீமூட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து மஞ்சள் ஆடை அணிந்து, தீக்கரகங்களையும், பூங்கரகங்களையும் ஏந்தி வெடி, மேள தாளங்களுடன் கோவில் வளாகத்தை வலம் வந்தனர் பின் தீமிதி களத்திற்கு சென்று பய பக்தியுடன் பச்சையம்மன் பாடல்களை பாடி தீமிதித்து நேர்த்தி செய்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்