SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கூனம்பட்டியில் உறியடி திருவிழா

2018-09-03@ 14:38:03

க.பரமத்தி: கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கூனம்பட்டியில் நடந்த உறியடி திருவிழாவில் வழுக்குமரம் ஏறும் போட்டியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றன். க.பரமத்தி ஒன்றியம் தென்னிலைமேற்கு ஊராட்சியில் கூனம்பட்டி கண்ணபிரான் பஜனை மடம் சார்பில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஆண்டுதோறும் உறியடி திருவிழாவில் வழுக்குமரம் ஏறும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவிற்காக நேற்று அதிகாலை 5 மணிக்கு உள்ளூர், வெளியூர் பக்தர்கள் பஜனை மடத்திற்கு ஏராளமனோர் வந்தனர். பிறகு வழுக்கு மரம் நடுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து கண்ணபிரானை அலங்கரித்து பல்லக்கில் வைத்து முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் வீடு வீடாக எடுத்து செல்லப்பட்டு வழிபாடு நடத்திய பிறகு மீண்டும் பஜனை மடத்தை வந்தடைந்தது.

பிறகு உறியடி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான உறியடி மற்றும் வழுக்குமரம் ஏறும் போட்டி நடத்தப்பட்டது. இந்த திருவிழாவிற்காக உள்ளூர், வெளியூர் பக்தர்கள் தங்களது ஆண் குழந்தைகளுக்கு கண்ணன் வேடமும், பெண் குழந்தைகளுக்கு ராதை வேடமும் அணிவித்து ஊர்வலமாக வந்து திருவிழாவில் பங்கேற்றனர். தொடர்ந்து மதியம் 2 மணிக்கு கண்ணபிரானுக்கு ஊஞ்சல் பாட்டு, மகா தீபாராதனை நடத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை கூனம்பட்டி கண்ணபிரான் பஜனை மடம் விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thiruvan_5thdaycelb

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

  • rarephots_indiragandhi

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

  • 2018_indiragandibirthdy

    இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

  • america_winterstorm2018

    வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

  • 2018wildfire_trumph

    கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்