SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வரகூர் வேங்கடேசபெருமாள் கோயிலில் கிருஷ்ணர் பிறப்பு நிகழ்ச்சி

2018-09-03@ 14:37:29

திருக்காட்டுப்பள்ளி: வரகூர் வேங்கடேசபெருமாள் கோயிலில் கிருஷ்ணர் பிறப்பு நிகழ்ச்சி நடந்தது. திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள வரகூர் வேங்கடேச பெருமாள் கோயிலில் உறியடி திருவிழா கடந்த 27ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதில் நேற்று கிருஷ்ணன் பிறப்பை பக்தர்கள் கோலாகலமாக கொண்டாடினர். மாலையில் கிருஷ்ணரை கூடையில் வைத்து வசுதேவர் யசோதாவிடம் கொண்டு செல்லும் நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் குழந்தைக்கு கிருஷ்ணர் வேடமிட்டு கூடையில் வைத்து பக்தர்கள் தூக்கி சென்றனர். பெண் குழந்தைகள் கோலாட்ட நடனமிட்டும், பக்தர்கள் நாமாவளி பாடியபடியும் சிவன் கோயிலில் இருந்து பெருமாள் கோயில் வரை வீதியுலா வந்தனர்.

பின்னர் கோயில் வளாகத்தில் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளின் ஸ்ரீகிருஷ்ண ஜனனம் உபன்யாசம் நடந்தது. விழாவின் சிறப்பு அம்சமான உறியடி திருவிழா இன்று நடக்கிறது. இதேபோல் விஷ்ணம்பேட்டை வேணுகோபால சுவாமி கோயிலில் நடைபெறும் கிருஷ்ண ஜன்மாஷ்டமி விழாவில் நேற்றிரவு ஸ்ரீகிருஷ்ண ஜனனம் உபன்யாசம், திவ்யநாம பஜனை டோலோத்சவம் நடந்தது. இன்று உறியடி திருவிழா நடக்கிறது. இதேபோல் இளங்காடு கண்ணன் கோயிலில் நேற்றிரவு கண்ணனின் “இராச லீலை” குறித்து ஸ்ரீரங்கம் திவ்ய கிருஷ்ணதாசனின் சொற்பொழிவு, வடக்கிப்பட்டி ஆண்டாள் கோலாட்ட குழுவினரின் நிகழ்ச்சி நடந்தது. இன்று உறியடி திருவிழா நடக்கிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்