SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓசூர் பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை : திரளான பக்தர்கள் வழிபாடு

2018-09-03@ 14:36:53

ஓசூர்: சிராவண 3வது சனிக்கிழமையை முன்னிட்டு ஓசூர் பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் சிராவண சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஓசூர் வெங்கடேஷ் நகரில் மலை மீதுள்ள வெங்கடரமண சுவாமி கோயில், கோபசந்திரம் அருகே தட்சணதிருப்பதி என்னும் வெங்கடாசலபதி கோயில், தேன்கனிக்கோட்டையில் உள்ள பேட்ராயசுவாமி கோயில், மதகொண்டப்பள்ளியில் உள்ள வெங்கடாசலபதி கோயில் உள்பட அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதில், கன்னட மொழி பேசும் மக்கள் திரளாக பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். இதனை முன்னிட்டு அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சர்வ தரிசன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும், நாதஸ்வர கச்சேரி, கர்நாடக இசை, பக்தி பாடல்கள், பரத நாட்டியம், ஹரிகதை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதையடுத்து, நேற்று கிருஷ்ண ஜெயந்தியையொட்டியும் அனைத்து பெருமாள் கோயில்களிலும் காலை முதலே சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

  • singaporeasianmodi

    சிங்கப்பூரில் 13வது கிழக்காசிய உச்சி மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்