SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகல கொண்டாட்டம்

2018-09-03@ 14:36:26

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவினையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி கிருஷ்ணகிரி பழையபேட்டை நரசிம்மசாமி கோயில் தெருவில் உள்ள கிருஷ்ணன் கோயிலில், சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்தனர். பின்னர் கிருஷ்ணன் சிலையை வாகனத்தில் வைத்து, மேள தாளத்துடன் காந்தி சிலை, நேதாஜி ரோடு, கோட்டை சாலை வழியாக சென்று, பின்னர் கோயிலை சென்றடைந்தனர். இதேபோல், தர்மராஜா கோயிலில் உள்ள கிருஷ்ணன் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து, மேள தாளத்துடன் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இந்த திருவீதி உலாவில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று, கிருஷ்ணன் தேரை இழுத்துச் சென்றனர். இதில் வழியெங்கும் பக்தர்கள் பூஜை செய்து, சுவாமியை வழிப்பட்டனர்.

ஓசூர்: ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஓசூர்ராயக்கோட்டை ரோட்டில் கோகுல் நகர் அருகில் உள்ள ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோயிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாற்றுமுறை மற்றும் தீர்த்த பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பல்வேறு வகையான பழ வகைகள் வைக்கப்பட்டிருந்தது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், மலை மீது அமைந்துள்ள வெங்கடாசலபதி கோயில், நேதாஜி சாலையில் உள்ள ராமர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும், கல்யாணவெங்கடேஸ்வரர், பாண்டுரங்கன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. ஓசூர் அருகே கோபசந்திரம் தட்சிண திருப்பதி கோயில், ஓசூர்பாகலூர் சாலையில் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள கிருஷ்ணன் கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் ஆராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்