SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்செந்தூர் ஆவணி 4ம்திருவிழா : சுவாமி, அம்மன் வாகனங்களில் வீதியுலா

2018-09-03@ 14:35:49

திருச்செந்தூர்: திருச்செந்தூர் ஆவணித்திருவிழா 4ம் திருவிழாவான நேற்று சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதிஉலா நடந்தது. அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் ஆவணித்திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலையில் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து கொண் டிருக்கிறது. நேற்று 4ம் திருவிழாவில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் பலவகையான அபிஷேகங்கள் நடந்தது.

தொடர்ந்து சிவகொழுந்தீஸ்வரர் கோயிலில் மாலை 6.30 மணிக்கு சுவாமி குமரவிடங்கபெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேலக்கோயில் வந்தடைந்தது.  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று 5ம் திருவிழாவன்று இரவு 7.30 மணிக்கு சிவன்கோயிலில் குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகஸ்தர்கள் செய்து வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

  • chinaboat

    உலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்