SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சித்தர்கள் நடமாடும் கந்தர்மலை கோயில்

2018-08-31@ 17:24:45

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் இருந்து அகரம் செல்லும் வழியில் இருக்கிறது சுண்டகாப்பட்டி கந்தர்மலை வேல்முருகன் கோயில். 750 அடி உயரத்தில் அமைந்துள்ள மலையில் 206 படிகளை கடந்து சென்று, இங்கு அருள்பாலிக்கும் வேல்முருகனை தரிசிக்கின்றனர் பக்தர்கள். கிருபானந்த வாரியாரும், காஞ்சி ஜெயேந்திரரும் இங்கு வந்து முருகனை வழிபட்டு பிரசங்கம் செய்தார்கள் என்பது சிறப்பு. ‘‘கந்தர்மலைக் கோயிலுக்கு செல்லும் வழியில் சூரியன், சந்திரன் ஒளிபடாத குளம் உள்ளது. வள்ளிக்கு விக்கல் எடுத்தபோது சூரியன், சந்திரன் ஒளிபடாத இடத்தில் இருக்கும்  தண்ணீரை அருந்தினால் விக்கல் நின்று விடும் என்று முருகன் கூறினார். இதைக்கேட்ட வள்ளியின் தோழிகள் கானகத்தில் இருந்த இந்த குளத்திற்கு வந்து தண்ணீர் எடுத்துச்சென்று வள்ளிக்கு கொடுத் துள்ளனர்.

அதன்பிறகே அவருக்கு விக்கல் நின்றுள்ளது. காலப்போக்கில் குன்றுகள் நிறைந்த இந்த பகுதியை சீரமைத்து முருகனுக்கு கோயில் கட்டி வழிபடத் தொடங்கினர் பக்தர்கள்’’  என்பது தலவரலாறு. இந்த குகைக்குளத்தில் உள்ள தண்ணீரை பக்தர்கள் வீட்டிற்கு எடுத்துச்சென்று தெளித்தால் சகல தோஷங்களும் நீங்கும் என்பதும், கந்தர்மலை வேல்முருகனை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண தடை நீங்கும். வியாபாரம் விருத்தியாகும். நோய் நொடிகள் அகலும். தீவினைகள் தூரஓடும். என்ன வேண்டுதல் வைத்தாலும் அதை உடனடியாக நிறைவேற்றுவார் ‘கந்தர்மலை வேல்முருகன்’ என்பது பக்தர்களிடம் தொடரும் நம்பிக்கையாக உள்ளது.  

வள்ளியின் தாகம் தீர்த்த மலைக்குகையில் அற்புத சித்தர்கள் அமர்ந்து தியானம் செய்தார்கள். வயது முதிர்ந்த அரிய வகை பாம்புகளும் இங்கு அதிகமாக உள்ளது. சித்தர்களும், பாம்புகளும் தற்போதும் அரூபமாக இந்த மலையில் நடமாடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். சமீபத்தில் பெங்களூரை சேர்ந்த கணேஷ்பைரவர் சுவாமிகள், இந்த மலைக்கு வந்து பூஜைகள் செய்து, தொடர்ச்சியாக பல நாட்கள் தவமிருந்தார்.  தர்மபுரி ஆத்மஜோ சுவாமிகள் இந்த குகையில் 27 நாட்கள் எதுவும் சாப்பிடாமல் இளநீர் மட்டும் குடித்து தவம் இருந்துள்ளார் என்று வியக்க வைக்கும் தகவல்களை கூறுகின்றனர் பக்தர்கள்.

பங்குனி உத்திரம், ஆடி கிருத்திகை, வைகாசி விசாகம் என்று அனைத்து விழாக்களும் இங்கு களை கட்டுகிறது. பங்குனி உத்திர விழாவின்போது நடக்கும் முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாண விழா மிகவும் பிரசித்தி பெற்றது. முகூர்த்த நாட்களில் நூற்றுக்கணக்கான திருமணங்கள், கந்தர்மலையில் நடக்கிறது. கந்தர்மலை வேல்முருகனை தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமன்றி, பெங்களூர், பாண்டிச்சேரியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 14-11-2018

  14-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • kumbamelawork

  அலகாபாத்தில் 2019ம் ஆண்டிற்கான கும்பமேளா திருவிழா பணிகள் தொடக்கம்

 • karwasaathhus

  கணவரின் நலன் வேண்டி வட இந்திய பெண்கள் கொண்டாடும் கர்வா சாத் பண்டிகை

 • statuevisitors

  உலகின் மிக உயரமான சர்தார் படேல் சிலையை காண 5 நாட்களில் 75,000 பார்வையாளர்கள் வருகை

 • californiafire

  கலிபோர்னியாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்